12th Supplementary Exam Hall Ticket 2025 Download
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு நுழைவுச் சீட்டு 2025 பதிவிறக்கம்
12th Supplementary Exam Hall Ticket 2025 Download PDF : ஜூன்/ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் குறித்த அறிவிப்பு
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு நுழைவுச் சீட்டு 2025 பதிவிறக்கம்
ஜூன்/ஜூலை 2025 இல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் (தத்கல் உட்பட), தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 19.06.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எங்கு பதிவிறக்கம் செய்வது?
www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
- இணையதளத்திற்குச் சென்றதும், முதலில் “HALL TICKET” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- தோன்றும் பக்கத்தில், “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2025 – HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை ‘Click’ செய்யவும்.
- அடுத்து தோன்றும் பக்கத்தில், உங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, உங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்புகள்:
- செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை, தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.
- உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- ஜூன்/ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணையை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 600 006.
தேதி: 17.06.2025.
Tamilnadu Latest Result 2025 Click