+2 துணைத்தேர்வு முடிவு ஜூன் / ஜூலை 2025 12th Supplementary Exam Result 2025 tamil nadu

12th Supplementary Exam Result 2025 tamil nadu

HSE Second Year Supplementary Exam, Jun / Jul 2025 – Result -Statement Of Marks Download 

+2 துணைத்தேர்வு ஜூன் / ஜூலை 2025: மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவது எப்படி? 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூன்/ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத்தேர்வு மற்றும் மார்ச் 2025 பருவத்திற்கு முந்தைய பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத (1 ARREAR) தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

12th Supplementary Exam Result 2025 tamil nadu

 

மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

ஜூன்/ஜூலை 2025 துணைத்தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை (Statement Of Marks)

12th re exam result date 2025 tamil nadu

25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

  • பதிவிறக்கம் செய்ய:
    1. www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். 
    2. “Result” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். 
    3. “HSE Second Year Supplementary Exam, Jun/Jul 2025 – Result – Statement Of Marks Download” என்பதைக் கிளிக் செய்யவும். 
    4. தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் முறை

ஜூன்/ஜூலை 2025 மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், கீழ்க்கண்ட நாட்களில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 

  • விண்ணப்பிக்கும் நாட்கள்:28.07.2025 (திங்கட்கிழமை) 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. 

    விண்ணப்பக் கட்டணம்: ஒரு பாடத்திற்கு ரூ.275/- (பணமாகச் செலுத்த வேண்டும்). 

  • விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்:
    • சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம். தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் தங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்.

மறுகூட்டல்/மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பதிவிறக்கம்

விடைத்தாள் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும்

www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வெளியிடப்படும்.

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல்/மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

இடம்: சென்னை-600 006.

தேதி: 24.07.2025. 

அரசுத் தேர்வுகள் இயக்குநர் 

Notification Link

TN 12th Supplementary Exam Result 2025 Direct Link 

12th Supplementary Exam Result 2025 Direct Link 

Leave a Comment