பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வெளியான ஹேப்பி நியூஸ்!..
3 Days Continue Leave Ramanathapuram District
3 Days Continue Leave Ramanathapuram District பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதி அன்று சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த குருபூஜையில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருவார்கள்.
எனவே இதற்கான பாதுகாப்பிற்காக ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நிலையில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள 82 பள்ளிகளுக்கு நேற்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் அறிவித்துள்ளார் .குறிப்பிட்ட 82 பள்ளிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறுகின்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வாகனங்களில் வந்து செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மக்களின் தேவைக்கேற்ப அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்துகளில் மேற்கூறையில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவித்திட வேண்டும். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வர உள்ளதால் அதற்கு ஏற்ப வாகனத்துக்கான முன் அனுமதி பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிய நேரத்தில் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி வந்து சென்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி இருக்கிறார்.