தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 37 அரசுப் பணியிடங்கள்!தேர்வு கிடையாது! DHS Recruitment 2025 Namakkal

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 37 அரசுப் பணியிடங்கள்!தேர்வு கிடையாது!

DHS Recruitment 2025 Namakkal

DHS Recruitment 2025 Namakkal: நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 37 காலியிடங்கள் உள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

DHS Recruitment 2025 Namakkal

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 17.06.2025
  • விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 04.07.2025

பணியிட விவரங்கள்:

1. Audiologist – Speech Therapist – DEIC

  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: மாதம் ₹23,000/-
  • கல்வித் தகுதி: இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் மொழி நோயியல் (Speech and Language Pathology) பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

2. Therapeutic Assistant (Female)

  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: மாதம் ₹13,000/-
  • கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் தெரபிஸ்ட் படிப்பு (Diploma Nursing Therapist Course) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

3. Mid Level – Health Care Provider- MTM

  • காலியிடங்கள்: 23
  • சம்பளம்: மாதம் ₹18,000/-
  • கல்வித் தகுதி: DGNM/B.Sc Nursing/B.Sc Nursing with Integrated curriculum (தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்).
  • வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

4. Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade-II – MTM

  • காலியிடங்கள்: 12
  • சம்பளம்: மாதம் ₹14,000/-
  • கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பில் உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் (Botany) மற்றும் விலங்கியல் (Zoology) பாடங்களைப் படித்திருக்க வேண்டும். SSLC/10ஆம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multipurpose Health Worker (MPHW) (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II பயிற்சி வகுப்பில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

பொதுத் தகவல்கள்:

  • விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
  • தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://namakkal.nic.in/ இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, அத்துடன் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்:

மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம். தொலைபேசி எண்: 04286 – 281424


குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Job Details – Click Now

Leave a Comment