TNPSC Group 4 Exam Guidelines 2025
TNPSC Group 4 தேர்வு 2025 – முக்கிய அறிவுறுத்தல்கள்
TNPSC Group 4 Exam Guidelines 2025: தேர்வர்கள் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து, தேர்வு தினத்தன்று பின்பற்ற வேண்டும்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

1. தேர்வு மைய வருகை நேரம்: தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2. ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை: தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மற்றும் நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card) / வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிர்ப்பட நகலைக் கொண்டு வர வேண்டும்.
3. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் / கையொப்பம்: தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் அல்லது கையொப்பம் இல்லாத அல்லது தெளிவாக இல்லாத சூழலில், தேர்வு மையத்திற்கு வரும்போது ஒரு ஒளிர்ப்படத்தையும், உரிய அதிகாரியிடம் கையொப்பத்தையும் பெற வேண்டும்.
தேர்வு மையத்தில் உள்ள அதிகாரிகள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு சுயசான்றொப்பத்தைப் பெற்று, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
4. OMR விடைத்தாள் பயன்பாடு: OMR விடைத்தாள்கள் மற்றும் பிற படிவங்களை நிரப்ப கருப்பு மை பால்பாயிண்ட் பேனா (black ink ballpoint pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஜெல் பேனா அல்லது பிற வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.
5. தேர்வு மையத்தில் பின்பற்றப்பட வேண்டியவை: தேர்வர்கள் தேர்வு மையத்தில் எந்தவித மின்னணு சாதனங்களையோ (மொபைல் போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை) அல்லது பிற தடை செய்யப்பட்ட பொருட்களையோ கொண்டு வரக் கூடாது.
அப்படி கொண்டு வந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். இது தேர்வர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
6. விடைத்தாள் பூர்த்தி செய்தல்: தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக விடைத்தாள்களை நிரப்பத் தயாராக இருக்க வேண்டும். OMR விடைத்தாளில் வினாக்களின் எண்ணையும், எழுத்துருக்களையும் சரியாகக் குறிப்பிட வேண்டும்.
ஏதேனும் தவறு செய்தால், அது குறித்து அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவித்து திருத்தப்பட்ட விடைத்தாளைக் கேட்டுப் பெறலாம்.
7. தேர்வு நேர கட்டுப்பாடுகள்: தேர்வு முடியும் வரை, தேர்வர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
8. முக்கிய குறிப்பு: இந்த தேர்வுக்கான அனுமதி என்பது தற்காலிகமானது. அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே இறுதி தேர்வு மற்றும் பணிநியமனத்திற்கு தகுதி பெறுவார்கள்.
Official Website- Click Here