தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி நியமன விவரங்கள் (திருப்பூர் மாவட்டம்)
TN Village Assistant Recruitment 2025 Tirupur
TN Village Assistant Recruitment 2025 Tirupur : திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நியமனம் தொடர்பான விரிவான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
பணியிடங்களின் எண்ணிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஊதிய விவரம்: சிறப்பு காலமுறை ஊதியம் (ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை).
முக்கிய தேதிகள்:
- தினசரி பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அறிவித்தல்: 06/07/2025 (ஞாயிறு / திங்கள்)
- விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள்: 04/08/2025
- விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள்: 12/08/2025
- தேர்வு நாள் (படித்தல் / எழுதுதல் திறன்): 2025 செப்டம்பர் 2 (செவ்வாய்க்கிழமை)
- நேர்காணல் தேதி: 2025 செப்டம்பர் 17, 18, 19, 22, 23 (புதன்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை, சனி மற்றும் ஞாயிறு நீங்கலாக)
- தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் மற்றும் பணி நியமன ஆணை வழங்குதல்: 2025 செப்டம்பர் 25 (வியாழக்கிழமை)
Village Assistant Application form Download 2025 Link
தகுதி மற்றும் மதிப்பெண் விவரங்கள்:
கல்வித்தகுதி:
தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC – Secondary School Leaving Certificate Examination) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதி படித்திருக்க வேண்டும். SSLC (Secondary School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். SSLC தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தேர்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்படும்.
மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன்:
(அ) இருசக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பின் (தேர்வு நடத்த தேவையில்லை)
(ஆ) மிதிவண்டி அல்லது இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் இருப்பின் (தேர்வு மூலம் கண்டறியப்பட வேண்டும்) முழு மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்படும்.
வாசித்தல் மற்றும் எழுதும் திறன்:
(அ) வாசிக்கும் திறனுக்கான தேர்வு (தமிழ்)
(ஆ) எழுதும் திறனுக்கான தேர்வு (தமிழ்) (நேர்காணல் குழுவின் முன் வாசித்திட மற்றும் எழுதிட வேண்டும்). விண்ணப்பதாரரின் வாசிக்கும் மற்றும் படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.
சொந்த ஊர் (Native Resident):
(தற்போதைய முகவரி சான்றுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்).
(அ) சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
(ஆ) சம்பந்தப்பட்ட தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். (நாளது தேதிப்படியான தாலுகா அதிகார வரம்பிற்குட்பட்டு).
கிராமத்தில் வசிப்பவர்களுக்கு 35 மதிப்பெண்கள், தாலுகாவில் வசிப்பவர்களுக்கு 30 மதிப்பெண்கள்.
வட்டம் வாரியான காலியிடங்கள் (மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலியிடங்கள் – 01.10.2019 க்கு முன்):
- திருப்பூர் தெற்கு: 05
- அவினாசி: 05
- ஊத்துக்குளி: 16
- பல்லடம்: 08
- தாராபுரம்: 36
- காங்கயம்: 08
- உடுமலைப்பேட்டை: 20
- மடத்துக்குளம்: 04
- மொத்த காலியிடங்கள்: 102
- திருப்பூர் வடக்கு: 0
நேர்காணல்:
பின்வரும் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் நேர்காணல் நடத்தப்படும்:
a) வருவாய் கோட்டாட்சியர்
b) வட்டாட்சியர்
c) பிற தனிவட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்/நில எடுப்பு (நெடுஞ்சாலை/சிப்காட்)/நிலவரித் திட்டம்).
நேர்காணலில் குறைந்தபட்சம் 6 மதிப்பெண்கள் முதல் அதிகபட்சம் 12 மதிப்பெண்கள் வரை வழங்கப்பட வேண்டும்.
06.07.2025 தேதி முதல் மட்டுமே புதிய விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு முந்தைய தினங்கள் வரை பெறப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக தேதிவாரியாக தனிப் பதிவேட்டில் பதியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்தும் பட்டியல் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு முறை (இனசுழற்சி முறை) உட்பட அரசினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும்.
official Notification- Click Now
மேலும் உங்களுக்கு மாவட்டம் வாரியாக வேலைவாய்ப்பு குறித்து விவரங்கள் தெரிய வேண்டும் என்றால் எங்களது வெப்சைட் https://tamilnaduinfo.in/ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கிராம உதவியாளர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி- முழு விவரங்கள்! TN Village Assistant Job 2025