கிராம உதவியாளர் பணி நியமனம் 2025 – கோயம்புத்தூர் மாவட்டம் TN Village Assistant Recruitment 2025 Coimbatore

கிராம உதவியாளர் பணி நியமனம் 2025 – கோயம்புத்தூர் மாவட்டம்

TN Village Assistant Recruitment 2025 Coimbatore

முக்கிய அறிவிப்பு

TN Village Assistant Recruitment 2025 Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலகில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 61 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் பணி விதிகள் 1995 மற்றும் அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TN Village Assistant Recruitment 2025 Coimbatore
TN Village Assistant Recruitment 2025 Coimbatore

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள்: 2025 ஆகஸ்ட் 4
  • விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் வாசித்தல்/எழுதுதல் திறனுக்கான நேர்காணலுக்கு கடிதம் அனுப்ப கடைசி நாள்: 2025 ஆகஸ்ட் 14
  • படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வு நடைபெறும் நாள்: 2025 செப்டம்பர் 4 முதல் 2025 செப்டம்பர் 10 வரை
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 2025 செப்டம்பர் 26 முதல் 2025 அக்டோபர் 8 வரை
  • இறுதி தேர்வு / தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல்: 2025 அக்டோபர் 22
Village Assistant Application form Download 2025 Link

கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் விவரங்கள்:

கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்கும் வழிமுறைகள் பின்வருமாறு:

கல்வித்தகுதி:

தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC – Secondary School Leaving Certificate Examination) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதி படித்திருக்க வேண்டும். SSLC (Secondary School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். SSLC தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தேர்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்படும்.

மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன்:

(அ) இருசக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பின் (தேர்வு நடத்த தேவையில்லை)
(ஆ) மிதிவண்டி அல்லது இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் இருப்பின் (தேர்வு மூலம் கண்டறியப்பட வேண்டும்) முழு மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்படும்.

வாசித்தல் மற்றும் எழுதும் திறன்:

(அ) வாசிக்கும் திறனுக்கான தேர்வு (தமிழ்)
(ஆ) எழுதும் திறனுக்கான தேர்வு (தமிழ்) (நேர்காணல் குழுவின் முன் வாசித்திட மற்றும் எழுதிட வேண்டும்). விண்ணப்பதாரரின் வாசிக்கும் மற்றும் படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.

சொந்த ஊர் (Native Resident):

(தற்போதைய முகவரி சான்றுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்).
(அ) சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
(ஆ) சம்பந்தப்பட்ட தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். (நாளது தேதிப்படியான தாலுகா அதிகார வரம்பிற்குட்பட்டு).

கிராமத்தில் வசிப்பவர்களுக்கு 35 மதிப்பெண்கள், தாலுகாவில் வசிப்பவர்களுக்கு 30 மதிப்பெண்கள்.

வட்டம் வாரியான காலிப் பணியிட விவரங்கள் (30.09.2022 அன்றைய நிலவரப்படி):

  • சூலூர் வட்டம்: 11 காலியிடங்கள்
    • கிராமங்கள்: கரவழிமாதப்பூர், அரசூர், அப்பநாயக்கன்பட்டி, பச்சாபாளையம், இடையர்பாளையம், செலக்கரிச்சல், வாரப்பட்டி, வதம்பச்சேரி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிப்புத்தூர், தாளக்கரை
  • அன்னுார் வட்டம்: 07 காலியிடங்கள்:
  • கிராமங்கள்: குப்பனூர், வடக்கலூர், பிள்ளையம்பாளையம், மசக்கவுண்டன்செட்டிபாளையம், காட்டம்பட்டி, கீரணத்தம், கொண்டையம்பாளையம்
  • பொள்ளாச்சி வட்டம்: 21 காலியிடங்கள்
    • கிராமங்கள்: ராமபட்டினம், நல்லுாத்துக்குளி, பூசநாய்க்கன் தளி, ஒக்கிலிபாளையம், ஆர்.பொன்னாபுரம், குரும்பபாளையம், தொப்பம்பட்டி, வெள்ளாளபாளையம், சந்திராபுரம், மூலனூர், அனுப்பர்பாளையம், புளியம்பட்டி, கிட்டசூரம்பாளையம், சங்கம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, குளத்தூர், மாக்கினாம்பட்டி, சோளபாளையம், சீலக்காம்பட்டி, எஸ்.மலையாண்டிபட்டணம், கஞ்சம்பட்டி
  • கிணத்துக்கடவு வட்டம்: 04 காலியிடங்கள்
    • கிராமங்கள்: சொலவம்பாளையம், சோழனூர், கிருஷ்ணராயபுரம், தேவனாம்பாளையம்
  • மேட்டுப்பாளையம் வட்டம்: 05 காலியிடங்கள்
    • கிராமங்கள்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிறுமுகை, சின்னக்கள்ளிப்பட்டி, சிக்காரம்பாளையம்
  • பேரூர் வட்டம்: 02 காலியிடங்கள்
    • கிராமங்கள்: தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம்
  • கோயம்புத்தூர் வடக்கு வட்டம்: 06 காலியிடங்கள்
    • கிராமங்கள்: பிளிச்சி (கிழக்கு), பிளிச்சி (மேற்கு), பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், தெலுங்குபாளையம்
  • ஆனைமலை வட்டம்: 05 காலியிடங்கள்
    • கிராமங்கள்: மார்ச்ச நாயக்கன்பாளையம், தளவாய்பாளையம், காளியாபுரம், அங்கலக்குறிச்சி, துறையூர்

கிராம உதவியாளர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி- முழு விவரங்கள்! TN Village Assistant Job 2025

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 61

கூடுதல் வழிமுறைகள்:

  • தினசரி நாளிதழ்களில் அறிவிக்கை வெளியிடவும், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியான நபர்களின் பட்டியலை அனுப்பவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • முதுநிலை மற்றும் இனசுழற்சி முறைகள் பின்பற்றப்படும்.
  • மேற்கண்ட பணிகள் அனைத்தும் 2025 ஜூலை 7 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக தேதிவாரியாக தனிப் பதிவேட்டில் பதியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.
  • விதிமீறல்கள் ஏதேனும் ஏற்படும் நிலையில், நடைமுறையை மீறிய அனைத்து அலுவலர்கள் மீதும் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    இந்த நியமன நடைமுறைகள் அனைத்தும் முறையாகவும், புகார்களுக்கு இடமின்றியும் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த கோட்ட அலுவலர்கள் பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக இணையதளத்தைப் பார்வையிடலாம்.

  1. official Notification- Click Now

மேலும் உங்களுக்கு மாவட்டம் வாரியாக வேலைவாய்ப்பு குறித்து விவரங்கள் தெரிய வேண்டும் என்றால் எங்களது வெப்சைட் https://tamilnaduinfo.in/ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment