தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!-515 காலியிடங்கள் BHEL Recruitment 2025 Apply

தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!-515 காலியிடங்கள்

BHEL Recruitment 2025 Apply

BHEL Recruitment 2025 Apply: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Artisans பிரிவில் காலியாக உள்ள 515 பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு மத்திய அரசுப் பணி என்பதால், நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
BHEL Recruitment 2025 Apply
BHEL Recruitment 2025 Apply

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 16.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2025

பணியின் பெயர், காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம்

பணியின் பெயர்: Artisans (ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், ஃபௌண்ட்ரிமேன் ஆகிய பிரிவுகளில்)

காலியிடங்கள்: 515

சம்பளம்: மாதம் ₹29,500 முதல் ₹65,000/- வரை.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வித் தகுதி:

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் தேசிய வர்த்தகச் சான்றிதழ் (NTC / ITI) மற்றும் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.
  • NTC/ITI மற்றும் NAC இரண்டிலும் பொது மற்றும் OBC பிரிவினர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயதுத் தளர்வு:

  • SC/ ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD பிரிவினர்: ₹472/-
  • மற்றவர்கள்: ₹1,072/-

கிராம உதவியாளர் பணி: 2299 காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! TN Village Assistant Recruitment 2025 Apply Details

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination – CBE)
  2. திறன் தேர்வு (Skill Test) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification)

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் BHEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bhel.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

முக்கிய இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment