கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க இந்த 4 ஆவணங்கள் கட்டாயம்! Kalaignar Urimai Thogai Apply Form Details

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க இந்த 4 ஆவணங்கள் கட்டாயம்!

Kalaignar Urimai Thogai Apply Form Details

Kalaignar Urimai Thogai Apply Form Details: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு திட்டமாகும். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Kalaignar Urimai Thogai Apply Form Details
Kalaignar Urimai Thogai Apply Form Details

இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள், விடுபட்டவர்கள் மற்றும் தகுதியுள்ள பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு முழுவதும் தகுதியுள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களைப் பெற்று, சரியான தகவல்களைப் பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.

Kalaignar Urimai Thogai Apply Form Details

மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வெளியில் யாரிடமும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ஏற்கனவே பதிவு செய்து விடுபட்ட அல்லது மறுக்கப்பட்ட தகுதியுள்ள மகளிரும், இந்த முகாம்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

  • 21 வயது நிரம்பிய பெண்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். ஆனால், குடும்பத்தில் வேறு எவரும் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.
  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்.
  • ஒரு குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், பராமரிப்பு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் நபர்கள் தகுதியற்றவர்கள்.
  • இருப்பினும், அந்தக் குடும்பத்தில் மேற்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வேறு தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்கும் குறைவான ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், திட்டத்தின் பிற விதிமுறைகளைப் பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம்.

யார் யார் விண்ணப்பிக்க முடியாது?

  • குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், ஆண்டு விற்பனை ₹50 லட்சத்திற்கு மேல் செய்து GST செலுத்துபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

Kalaignar Urimai Thogai Apply Form Details

  • சொந்தப் பயன்பாட்டிற்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
  • ஆனால், அரசுத் திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது.

Kalaignar Urimai Thogai Apply Form Details

கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் பின்வரும் நான்கு ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது:

  1. ரேஷன் கார்டு (குடும்ப அட்டை)
  2. ஆதார் கார்டு
  3. வங்கி பாஸ்புக்
  4. மின் கட்டண ரசீது

மேலும், வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

முக்கிய குறிப்புகள்

இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த முறை விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை அரசு தீரப் பரிசீலித்து, கள ஆய்வு செய்து தேர்வு செய்ய உள்ளது.

அனைத்து ஆவணங்களும், தகுதிகளும் சரியாக இருப்பவர்களுக்கு இந்த முறை கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.

Kalaignar Urimai Thogai Apply Form Details

அதிகபட்சம் 45 நாட்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களின் மீதான விண்ணப்பங்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஒருவேளை விண்ணப்பத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதிகாரிகள் உங்களிடம் தெரிவிப்பார்கள். அப்போது, அதற்கான முறையான விளக்கத்தை அளித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.

அதேநேரம், தவறான தகவல்கள், போலி ஆவணங்கள் மற்றும் தகுதியற்ற காரணங்கள் இருந்தால் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Leave a Comment