சொந்த ஊரில் 67 கிராம உதவியாளர் பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம்! TN Village Assistant Job Namakkal 2025

சொந்த ஊரில் 67 கிராம உதவியாளர் பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம்!

TN Village Assistant Job Namakkal 2025

TN Village Assistant Job Namakkal 2025: நாமக்கல் மாவட்டம் வருவாய் அலகில் கிராம உதவியாளர் பணியிடங்கள்:

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்குத் தேவையான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள், மற்றும் தேர்வு முறை குறித்த முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

TN Village Assistant Job Namakkal 2025
TN Village Assistant Job Namakkal 2025

நிறுவனம் மற்றும் பணியின் வகை:

  • நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
  • பணியின் வகை: தமிழ்நாடு அரசு வேலை

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025

பணியின் விவரங்கள்:

  • பணியின் பெயர்: கிராம உதவியாளர்
  • மொத்த காலியிடங்கள்: 67
  • பணியிடம்: நாமக்கல் மாவட்டம்
  • சம்பளம்: மாதம் ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை

தாலுகா வாரியான காலியிடங்கள்:

  • நாமக்கல்: 14
  • சேந்தமங்கலம்: 11
  • கொல்லிமலை: 04
  • மோகனூர்: 13
  • திருச்செங்கோடு: 12
  • பரமத்தி வேலூர்: 02
  • குமாரபாளையம்: 11

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராமப் பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு (18.07.2025 நிலவரப்படி):

  • BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST பிரிவினர்: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள்: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • இதர வகுப்பினர்: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்.
  2. நேர்காணல்.
  3. சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் namakkal.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment