ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2025- தேர்வு கிடையாது! Erode DHS Recruitment 2025

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2025- தேர்வு கிடையாது!

Erode DHS Recruitment 2025

Erode DHS Recruitment 2025: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு அருமையான வேலைவாய்ப்பு! பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் 27 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Erode DHS Recruitment 2025
Erode DHS Recruitment 2025

காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதிகள்:

மொத்தம் 10 விதமான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்:

  • ஹீமோகுளோபினோபதி ஆலோசகர் (1): சமூகவியல், உளவியல், சமூக சேவை, நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 18,000.
  • சிறப்பு கல்வியாளர் (1): அதற்கான தகுந்த இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்து, பதிவு செய்திருக்க வேண்டும். 40 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 23,000.
  • ஆடியோ மெட்ரிக் உதவியாளர் (1): அதற்கான 1 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 17,250.
  • ரேடியோகிராப்பர் (1): பி.எஸ்சி ரேடியோகிராப்பி முடித்திருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 13,300.
  • MMU டிரைவர் (1): 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 13,500.
  • MMU கிளீனர் (1): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 8,500.
  • தூய்மை பணியாளர் (1): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 8,500.
  • பல்துறை மருத்துவமனை பணியாளர் (12): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 8,500.
  • சித்தா – பல்துறை மருத்துவமனை பணியாளர் (5): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாளுக்கு ரூ. 300 வழங்கப்படும்.
  • சித்தா – சிகிச்சை உதவியாளர் (3): நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 15,000.

வயது வரம்பு:

பணியிடங்களுக்கான வயது வரம்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

சிகிச்சை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் கிடையாது. மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் வழியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாநகராட்சியில் வேலைவாய்ப்பு! 36 காலியிடங்கள்-சம்பளம்: Rs.14,000,தேர்வு கிடையாது.. Salem Corporation Recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்தப் பணியிடங்களுக்கு https://erode.nic.in/ என்ற மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Leave a Comment