தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! Today Heavy Rain Alert Tamilnadu July 21

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Heavy Rain Alert Tamilnadu July 21

Today Heavy Rain Alert Tamilnadu July 21: சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Today Heavy Rain Alert Tamilnadu July 21

குறிப்பாக, இன்று (ஜூலை 22, 2025) கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

நேற்று காலை (ஜூலை 21) வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 8 செ.மீ. மழையும், வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாவட்ட வாரியாக மழைப்பொழிவு எதிர்பார்ப்பு

  • இன்று (ஜூலை 22): கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
  • நாளை (ஜூலை 23): கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment