தமிழக அரசின் சத்துணவு அமைப்பாளர் வேலைக்கான கல்வி தகுதி சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!
Noon Meal Organizer Recruitment 2024 Tamil
Noon Meal Organizer Recruitment 2024 Tamil: இன்று அனைவருடைய கனவாக இருப்பது அரசு பணி பெற வேண்டும் என்பதுதான் அதை பெறுவதற்காக நாம் கடினமாக உழைத்து வருகின்றோம் அரசு வேலை என்றால் பணி நிரந்தரமாக இருக்கும் சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும் மற்றும் குறித்த நேரத்தில் நாம் பணியை முடித்துவிட்டு திரும்பிவிடலாம் என்று எண்ணற்ற பயன்கள் அரசு பணியில் உள்ளது எனவே அரசு பணியை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்ற அனைவருக்கும் என் முதற்கண் வாழ்த்துக்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தாலுக்கா அலுவலகங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றில் மிகவும் முக்கியமாக தேர்வின் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலமாகவும் குறிப்பிட்ட பணி தேர்வு செய்யப்படுகின்றது.
தேர்வு மூலமாக கிடைக்கக்கூடிய பணிகள் இளநிலை உதவியாளர். தட்டச்சர் .கிராம நிர்வாக அலுவலர். வருவாய் அலுவலர் மற்றும் கிளார்க் பணியிடங்கள் ஆகும்.
மேலும் இப்பகுதியில் நாம் சத்துணவு துறையில் இருக்கின்ற விவரத்தைக் குறித்து நாம் காணலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி உள்ள தேர்வு இல்லாத அரசு வேலைவாய்ப்பு தான் இந்த சத்துணவு துறையில் இருக்கிறது. இப்பணியை குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர்
கல்வித் தகுதி
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூபாய் 7,500 முதல் 24,200 வரை மாத ஊதியம் மற்றும் பிறபடிகள் வழங்கப்படும்.
- 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
அடிப்படைத் தகுதிகள் என்ன
- பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்.
- விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்.
- உங்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மைய வேலைகளுக்கு மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
- சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 4% சதவீதம் ஒதுக்கீடு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை:
எளிய நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான பெண்களை தேர்வு செய்து, உங்கள் பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் உங்களுக்கான சத்துணவு மைய பதவிகள் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக சத்துணவு துறை வேலை வாய்ப்பு தகவல்கள் அனைத்தும், முந்தைய வருட சத்துணவு மைய வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே.
இந்த வருடத்திற்கான தமிழக சத்துணவு துறை வேலைகளுக்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் மாவட்ட சத்துணவு துறை வேலைக்கான அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகிய உடன், உங்கள் மாவட்ட அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலமாக விண்ணப்பத்தை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழக சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்த பிறகு, அதனை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜெராக்ஸ் எடுத்துக் கொண்ட உங்களது சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியாகவும் உண்மையாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த உங்களது தமிழக சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விட வேண்டும்.
பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும், தமிழ்நாடு சத்துணவு துறை மூலமாக நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடப்படும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மையங்கள் மூலமாக வேலைகள் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய விவரங்கள்:
சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் போன்ற வேலைகளுக்கு, உங்கள் சத்துணவு துறை விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள்.
- உங்களின் பெயர்
- தகப்பனார் பெயர் அல்லது கணவர் பெயர்
- இருப்பிட முழு முகவரி ( அஞ்சல் என்னுடன் )
- விண்ணப்பிக்கும் பணி
- பிறந்த தேதி விவரம்
- கல்வி தகுதி
- பணியிடம் கோரும் பள்ளியின் பெயர்
- விண்ணப்ப தாரரின் இருப்பிடத்திற்கும் விண்ணப்பிக்கும் பள்ளிக்கும் உள்ள தூரம்
- ஒதுக்கீட்டு விவரம், ஜாதி மற்றும் உட்பிரிவு
- இருப்பிடத்திற்கான ஆதாரம்
- ஊனமுற்றோர் விவரம் ( ஆம் அல்லது இல்லை )
- மனுதாரர் ஆதரவற்ற விதவையா அல்லது கணவரால் கைவிடப்பட்டவரா மற்றும் பிற குறிப்பு தகவல்.