Diploma Express Revaluation 2025 TNDTE Apply online
டிப்ளமோ தேர்வு முடிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டு அறிவிப்பு
TNDTE Diploma Express Revaluation 2025 TNDTE Apply online அறிவிப்பு டிப்ளமோ தேர்வு முடிவுகள் ஜூன் 5 ஆம் தேதி நள்ளிரவில் வெளியிடப்பட்டன, இதனால் ஜூன் 6 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகக் கருதப்படும். தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத, அதாவது குறைந்த மதிப்பெண் பெற்ற அல்லது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், உடனடியாக மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மறுமதிப்பீட்டுக்கான கட்டண விவரங்கள் மற்றும் செயல்முறை
விரைவு மறுமதிப்பீடு (Express Revaluation): மாணவர்கள் தங்கள் மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகளை விரைவாகப் பெற, டிப்ளமோ எக்ஸ்பிரஸ் (Diploma Express) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூபாய் 500 கட்டணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில், விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெறாமலேயே நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (Scanned Copy) + மறுமதிப்பீடு: விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெற விரும்பும் மாணவர்கள், முதலில் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் வழங்கப்படும். அதன்பின், மாணவர்கள் ரூபாய் 400 செலுத்தி மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் ஜூன் 6 ஆம் தேதி, இன்று முதல், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கான இணைப்பு (லிங்க்) https://dipexamstndte.in/DipExOnline/ இந்த இணைப்பு மூலம் மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு வெளியாகும் தேதி ஆகியவை இன்னும் சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் சுற்றறிக்கையாக வெளியிடப்படும்.
டிப்ளமோ தேர்வு முடிவுகளைப் பார்ப்பதற்கான இணைப்பு