இலவச மடிக்கணினி திட்டம் 2025- வெளியானது ஹாப்பி நியூஸ்!
Free Laptop Scheme 2025 In Tamilnadu Details
Free Laptop Scheme 2025 In Tamilnadu Details: கடந்த 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்ட இத்திட்டம், பல மாணவர்களுக்குக் கணினி அறிவையும், தொழில்நுட்பத்துடன் பழகும் திறனையும் வழங்கியது. இருப்பினும், இந்தத் திட்டம் 2019ஆம் ஆண்டுடன் முழுமையாக நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கும் மடிக்கணினி திட்டம்
தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாநில பட்ஜெட் கூட்டத்தில் நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும் புதிய திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் 20 லட்சம் மடிக்கணினிகளைத் தயாரிக்க சர்வதேச டெண்டரை அறிவித்துள்ளது.
புதிய மடிக்கணினியின் தொழில்நுட்ப அம்சங்கள்
விரைவில் வழங்கப்படவுள்ள இந்த புதிய மடிக்கணினிகள் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த மடிக்கணினிகளில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பகம் மற்றும் 14 இன்ச் அளவுடைய திரை போன்ற சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.