இந்தியன் வங்கியில் 1500 காலி பணியிடங்கள் அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகள்! Indian Bank Recruitment 2025 Apprentice

இந்தியன் வங்கியில் 1500 காலி பணியிடங்கள் அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகள்!

Indian Bank Recruitment 2025 Apprentice

Indian Bank Recruitment 2025 Apprentice: இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்காக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Indian Bank Recruitment 2025 Apprentice

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 18.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2025

சம்பளம் மற்றும் காலியிட விவரங்கள்

பதவி: அப்ரண்டிஸ் (Apprentice)

காலியிடங்கள்: 1500

சம்பளம்:

  • பெருநகர / நகர்ப்புறக் கிளைகள்: ₹15,000/-
  • கிராமப்புற / பகுதி நகர்ப்புறக் கிளைகள்: ₹12,000/-

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 01.04.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்து, அதற்கான சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயதுத் தளர்வு:

  • SC/ ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD பிரிவினர்: ₹175/-
  • மற்றவர்கள்: ₹800/-

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் தேர்வு (Online Test)
  2. உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Proficiency Test – LLPT)

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • வங்கியில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், NATS 2.0 இணையதளத்தில் (www.nats.education.gov.in) பதிவு செய்வது கட்டாயமாகும். (இது 01.04.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்).
  • விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    விண்ணப்ப படிவம்Click here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment