இந்திரா காந்தி தேசிய விதவை ரூ.1200 ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்: முழுமையான வழிகாட்டி
Indira Gandhi National Widow Pension Scheme Apply
Indira Gandhi National Widow Pension Scheme Apply : கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கி, அவர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் இந்திய அரசு இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டத்தை (Indira Gandhi National Widow Pension Scheme – IGNWPS) அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கட்டுரையில் இந்தத் திட்டம் குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
கணவரை இழந்த பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள், சமூகச் சார்ந்து வாழும் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக 2009 பிப்ரவரி மாதம் இந்திய அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மூலம் கணவரை இழந்த பெண்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இது மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாக இருந்தாலும், மாநில அரசுகளின் பங்களிப்பும் இதில் அடங்கும். இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், ஓய்வூதிய உதவித்தொகை மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து சற்று மாறுபடலாம்.
இந்திரா காந்தி விதவை ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய நன்மைகள்
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டத்தின் கீழ், விதவைப் பெண்களுக்கு அவர்களின் அன்றாட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண் இறக்கும் வரை இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- கூடுதல் சலுகைகள்: ஓய்வூதியம் பெறும் பயனாளி 80 வயதை அடைந்த பிறகு, விதவை ஓய்வூதியத் தொகையோடு சேர்த்து முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.500 வழங்கப்படும்.
- தமிழ்நாடு சிறப்பு: தமிழ்நாட்டில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது விதவைகளுக்கு இலவச சேலையும், அங்கன்வாடி மையங்களில் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு: திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் விதவைப் பெண் இறந்துவிட்டால், அவரது குழந்தைகளுக்கோ அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினருக்கோ ஓய்வூதிய பலன்களைப் பெற உரிமை இல்லை.
இந்திரா காந்தி விதவை உதவித்தொகை திட்டத்திற்கான தகுதிகள்
இத்திட்டத்தின் மூலம் நிதியுதவியைப் பெற விரும்பும் விதவைப் பெண்கள் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- நிலை: விண்ணப்பதாரர் விதவையாகவோ அல்லது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
- மறுமணம்: விண்ணப்பதாரர் மறுமணம் செய்திருக்கக்கூடாது.
- வருமானம்: நிதிச் சிக்கலை எதிர்கொள்ளும் வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1,00,000/- அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
- வயது: விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 18 முதல் 60 வரை இருக்க வேண்டும்.
- குழந்தைகள்: ஆண் அல்லது பெண் குழந்தைகள் இருந்து, அவர்கள் தாயை கவனித்துக் கொள்ளாமல் இருந்தால், அந்த விதவைப் பெண்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்.
இந்திரா காந்தி விதவை உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையைப் பெற விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்:
- ஆதார் அட்டை
- பிறப்பு சான்றிதழ்
- BPL ரேஷன் கார்டு
- கணவரின் இறப்புச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- வங்கிக் கணக்குப் புத்தகம்
- வாக்காளர் அடையாள அட்டை
இந்திரா காந்தி விதவை உதவித்தொகை பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்திற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள்:
- அலுவலகம் செல்லுதல்: உங்கள் கிராம பஞ்சாயத்து, நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்திற்குச் செல்லவும்.
- விண்ணப்பப் படிவம் பெறுதல்: அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திரா காந்தி விதவை ஓய்வூதியத் திட்டம் குறித்துக் கூறினால், அதற்கான பிரத்யேக விண்ணப்பப் படிவத்தை வழங்குவார்கள்.
- படிவத்தைப் பூர்த்தி செய்தல்: படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பிழையில்லாமல் பூர்த்தி செய்யவும்.
- ஆவணங்களை இணைத்தல்: தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும்.
- சமர்ப்பித்தல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும்.
- பரிசீலனை மற்றும் ஒப்புதல்: விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு பயனாளிகளின் பட்டியல் அனுப்பப்படும்.
- ஓய்வூதியம்: அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் பயனாளியின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியத் தொகை டெபாசிட் செய்யப்படும்.
குறிப்பு: இந்திரா காந்தி விதவை ஓய்வூதியத் திட்டம் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறாக உள்ளதால், விண்ணப்பிக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்!
இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை எவ்வளவு? இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள விதவைப் பெண்களுக்கு மாதம் ரூ.1,200 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி விதவை உதவித்தொகைக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? கணவர் இறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியத் தொகை அந்தப் பெண்ணின் இறப்பு காலம் வரை வழங்கப்படும்.
மறுமணம் செய்த விதவைப் பெண்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா? மறுமணம் செய்துகொண்ட விதவைப் பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், இரண்டாவது கணவர் இறந்த பிறகு, இந்த ஓய்வூதிய பலன்களைப் பெற விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விதவை ஓய்வூதியம் பெறும் பெண் மறுமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும்? ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் விதவைப் பெண் மறுமணம் செய்துகொண்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
இந்திரா காந்தி விதவை பென்ஷன் திட்டத்தின் நோக்கம் என்ன? நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள விதவைப் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்திரா காந்தி விதவை ஓய்வூதிய திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் யார்?
- மற்ற சமூக நல ஓய்வூதிய திட்டங்களில் இருந்து ஓய்வூதியங்களைப் பெறுபவர்கள்.
- பராமரிக்க யாரும் இல்லை என்று பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.
- அனாதை அல்லது முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விதவைப் பெண்கள். மேற்கண்டோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு? இந்திய அரசாங்கம் 2009 பிப்ரவரி மாதம் இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கியது.