July 7 2025 Holiday News
விடுமுறை ஜூலை 7ஆம் தேதி அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஜூலை 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
July 7 2025 Holiday News திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரமாண்டமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் வெகு விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் ரயில்வே துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.