ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?- முழு விவரம் இதோ! June Month Holiday List 2025

ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?- முழு விவரம் இதோ!

June Month Holiday List 2025

June Month Holiday List 2025: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நாட்கள்!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
June Month Holiday List 2025
June Month Holiday List 2025

சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறைக்குப்பின், ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்குத் திரும்பிய மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகத்துடன் இனிப்பு மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

மே மாத இறுதியில் பெய்த மழையால் குளிர்ந்திருந்த சூழல், ஜூன் மாதத் தொடக்கத்திலேயே திடீரென அதிகரித்த வெயிலால் மாறி உள்ளது. இதற்கிடையே, கல்லூரிகளும் இந்த மாதம் திறக்கப்பட உள்ளன.

2025-26 கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் எத்தனை நாட்கள் இயங்கும், விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை இந்தப் பதிவில் விரிவாகக் காணலாம்.


உற்சாக வரவேற்புடன் பள்ளிகள் திறப்பு:

தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பல இடங்களில் மேள தாளங்கள் முழங்க, பாடல்கள் பாடி, இனிப்பு மற்றும் பூக்கள் தூவி மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நாட்கள் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

நீண்ட கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 2-ம் தேதி மாநிலம் முழுவதும் பள்ளிகள் 2025-26 கல்வி ஆண்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வரவேற்றனர்.

பள்ளிக் கல்வித்துறையில் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடைநிற்றல் மாணவர்களை உடனே கண்டறிந்து, பள்ளி படிப்பை தொடர்வதை உறுதி செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

வானிலையில் மாற்றம்

June Month Holiday List 2025

பள்ளிகள் திறந்த உடனே வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், ஜூன் முதல் நாளே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

மதுரை, வேலூர், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, சென்னை, ஈரோடு, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வெயிலில் தாக்கத்தினால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சி அடைந்தது.

தற்போது பள்ளிகள் திறப்பிற்கு பின்னர் வெயில் கொளுத்துகிறது. இதனால் மாணவர்கள், பெற்றோர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாத விடுமுறைகள் மற்றும் வேலை நாட்கள்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முழு விவரம்!

எத்தனை நாட்கள் விடுமுறை?

ஜூன் மாதத்தில், பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ம் தேதி (சனிக்கிழமை) வருவதால், அதுவே ஒரே ஒரு அரசு விடுமுறை நாளாகும். மே 28-ம் தேதி பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை (பொறுப்பு) காஜி முகமது அக்பர் இந்தப் பண்டிகையின் தேதியை அறிவித்திருந்தார்.

இந்த ஜூன் மாதத்தில், வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்த்துப் பள்ளிகளுக்கு மொத்தம் 8 நாட்கள் விடுமுறை இருக்கும். அவை:

  • ஜூன் 7 (சனிக்கிழமை – பக்ரீத்)
  • ஜூன் 8 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஜூன் 14 (சனிக்கிழமை)
  • ஜூன் 15 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஜூன் 21 (சனிக்கிழமை)
  • ஜூன் 22 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஜூன் 28 (சனிக்கிழமை)
  • ஜூன் 29 (ஞாயிற்றுக்கிழமை)

பள்ளிகளின் வேலை நாட்கள்:

ஜூன் மாதத்தில் வார இறுதி விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களும் பள்ளிகளுக்கு வேலை நாட்கள் ஆகும். எனவே, இந்த மாதம் பள்ளிகள் மொத்தம் 21 நாட்கள் இயங்கும்.

இந்தக் கல்வி ஆண்டில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தப் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்களில் வாசிக்கும் வகையில், கலை சொல்லும் அமர்வுகள், வாசிப்புச் சவால்கள் போன்ற அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. வாசிப்புப் பழக்கம், கற்றல் திறன், ஆங்கிலத்தில் பேசும் திறன் மேம்பாடு, இடைநிற்றல் குறைப்பு, திருக்குறள் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் இந்தக் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படுகின்றன.

கல்லூரிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளன.

  • அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
  • 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட ஆன்லைன் விண்ணப்பம் மே 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெற்றது.
  • தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
  • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் ஜூன் 30-ம் தேதி (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதி திறக்கப்படுவதால், ஜூன் 15 வரை விடுமுறை நாட்களாகும். எனவே, கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் சுமார் 19 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கல்லூரிகளின் விதிமுறைகளைப் பொறுத்து, சில சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெற வாய்ப்புள்ளது.

Leave a Comment