கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மீண்டும் விண்ணப்பிக்க முக்கிய ஆவணங்கள்
Kalaingar Magalir Urimai Thogai Apply Details 2025
Kalaingar Magalir Urimai Thogai Apply Details 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணி ஜூன் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய மூன்று முக்கிய ஆவணங்கள் இவை,
மூன்று முக்கிய ஆவணங்கள்
- ரேஷன் கார்டு (குடும்ப அட்டை): இது மிகவும் முக்கியமான ஆவணம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
- வங்கி கணக்கு புத்தகம்: விண்ணப்பிப்பவரின் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது வங்கி பாஸ்புக்கின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆதார் கார்டு: ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படும் ஒரு ஆவணம்.
இந்த மூன்று முக்கிய ஆவணங்கள் தவிர, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை (MGNREGA அட்டை) போன்ற வேறு ஏதேனும் ஓர் ஆவணத்தையும் கொடுக்கலாம். மேலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றும் அவசியம்.
மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம்
இதுநாள் வரை காத்திருந்தவர்கள் ஜூன் 4 ஆம் தேதிக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அன்றைய நாளில் தான் தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விண்ணப்பிக்கும் தேதி மற்றும் விவரம்
அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் இந்த சிறப்பு முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுவரை இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் ஜூன் 4 ஆம் தேதி முதல் நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆவணங்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்!
More Details – Click Here