பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! லாவா ஷார்க் 5ஜி
LAVA Shark 5G Mobile Details
LAVA Shark 5G Mobile Details லாவா ஷார்க் 5ஜி: பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா (Lava) நிறுவனம் தனது புதிய ‘ஷார்க் 5ஜி’ (Shark 5G) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட லாவா இண்டர்நேஷனல், மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த மாதம் இதே ‘ஷார்க்’ ஸ்மார்ட்போனை 4ஜி மாடலாக லாவா வெளியிட்டது. தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட 5ஜி மாடல் சந்தைக்கு வந்துள்ளது. இந்த போன் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.
லாவா ஷார்க் 5ஜி – சிறப்பம்சங்கள்:
- டிஸ்பிளே: 6.75 இன்ச் ஹெச்டி+
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15
- ப்ராஸசர்: Unisoc T765 ஆக்டா-கோர்
- ரேம்: 4ஜிபி
- இன்டர்னல் ஸ்டோரேஜ்: 64ஜிபி
- பின்பக்க கேமரா: 13 மெகாபிக்சல்
- செல்ஃபி கேமரா: 5 மெகாபிக்சல்
- பேட்டரி: 5,000mAh
- சார்ஜிங்: 10 வாட்ஸ் சப்போர்ட், டைப்-சி சார்ஜர்
- மற்ற அம்சங்கள்: ஓடிஜி சப்போர்ட், ட்யூயல் நானோ சிம்
- வண்ணங்கள்: இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது
- விலை: ரூ.7,999