12 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே! -சொந்த மாவட்டத்தில் அரசாங்க வேலை விண்ணப்பிப்பது எப்படி? Madurai DCWSS Recruitment 2025 Apply

12 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே! -சொந்த மாவட்டத்தில் அரசாங்க வேலை விண்ணப்பிப்பது எப்படி?

Madurai DCWSS Recruitment 2025 Apply

Madurai DCWSS Recruitment 2025 Apply: மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பதவிக்கான ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Madurai DCWSS Recruitment 2025 Apply

முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, தமிழ்நாடு அரசு
  • பணியின் பெயர்: புறத்தொடர்பு பணியாளர்
  • மொத்த காலியிடங்கள்: 01
  • சம்பளம்: மாதம் ரூ. 10,592/-
  • பணியிடம்: மதுரை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 09.06.2025
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.06.2025

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:

  • கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்:

  • தேர்வு முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

  1. மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  2. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு எடுத்து, தெளிவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

  3. தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சான்றிதழ்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.06.2025 அன்று அல்லது அதற்கு முன் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3வது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை – 625 020.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பயனுள்ள இணைப்புகள்:

Leave a Comment