கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?- விண்ணப்பிக்க முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.. Magalir Urimai Thogai Apply Candidates Eligible

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?- விண்ணப்பிக்க முன் தெரிந்து கொள்ள வேண்டியவை..

Magalir Urimai Thogai Apply Candidates Eligible

Magalir Urimai Thogai Apply Candidates Eligible: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Magalir Urimai Thogai Apply Candidates Eligible

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்களும், புதிய விண்ணப்பதாரர்களும் தற்போது ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை நடைமுறைக்கு வந்தாலும், விண்ணப்பித்த அனைவருக்கும் தொகை வழங்கப்படாததால், நிராகரிக்கப்பட்டவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த பட்ஜெட்டில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விடுபட்டவர்களும், புதிய விண்ணப்பதாரர்களும் இப்போது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

விண்ணப்பம் செய்யும்போது, பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்:

  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  • ஆதார் அட்டை
  • ரேஷன் அட்டை
  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்

உரிமைத்தொகை கிடைப்பதை உறுதிசெய்ய, ஆதார், வங்கி பாஸ்புக் மற்றும் மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

நிதி வரவு வைக்கப்பட்டாலும், வங்கிக் கணக்குடன் மொபைல் எண் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே குறுஞ்செய்தி (SMS) சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும்.

யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்காது?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அனைவருக்கும் பொதுவானதல்ல. சில தகுதிக் கட்டுப்பாடுகள் உள்ளன. விண்ணப்பிக்கும் முன், நீங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்வரும் பிரிவினருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது:

  • ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
  • வருமான வரி செலுத்துவோர்.
  • மத்திய, மாநில அரசு ஊழியர்கள்.
  • ஓய்வூதியம் பெறும் மகளிர்.
  • எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் (வார்டு உறுப்பினர்களைத் தவிர).
  • முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் பெறுவோர்.
  • கார், ஜீப், கனரக வாகனங்கள், டிராக்டர் வைத்திருப்பவர்கள்.
  • ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் வருவாய் பெற்று ஜி.எஸ்.டி (GST) செலுத்துவோர்.

இந்தக் கட்டுப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, தகுதியுள்ள மகளிர் விண்ணப்பித்து பயனடையலாம்.

https://tamilnaduinfo.in/

https://kmut.tn.gov.in/

Leave a Comment