மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 அடிக்க போகுது ஜாக்பாட்.. மேலும் 2.30 லட்சம் பேருக்கு வெளியான புதிய தகவல்!..
Magalir Urimai Thogai Latest News Sep 9
Magalir Urimai Thogai Latest News Sep 9 தமிழகத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைக்காக திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் திமுக ஆனது தேர்தல் வாக்குறுதியாக இந்த திட்டத்தை அறிவித்திருந்தது, தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பிறகு மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த மாதத்தில் கலைஞர் மகளை உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை காண நிபந்தனைகளை தளர்த்தி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகிய ஒரு இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத்தகையானது வரும் 14ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு வருகின்ற 15-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே இந்த திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிற.து மேலும் தற்போது உள்ள வருமான உச்சவரம்பை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக நிர்ணயிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறதாம் .ஒருவேளை வருமான உச்சவரம்பை உயர்த்தினால் கூடுதல் பெண்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.