Mobile Recharge Rates are going to increase again
என்னங்கடா இது? மீண்டும் ரீசார்ஜ் கட்டணம் உயரப்போகுதா?
Mobile Recharge Rates are going to increase again சிக்னல் இருக்கோ இல்லையோ, மாசமான ரீசார்ஜ் பண்ணுங்கிற மெசேஜ் மட்டும் சட்டுன்னு வந்துடுது
என நொந்துகொள்ளாத பயனர்களே இந்தியாவில் இருக்க முடியாது.

இந்த ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் விலை உயர்வு இருக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய தகவல்களின்படி, ஜூலை – ஆகஸ்ட் மாதங்களிலேயே இந்த விலை ஏற்றம் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கட்டண உயர்வு ஒரு பார்வை
கடந்த ஆண்டு ஜூலை மாதம், மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை 10 முதல் 27 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் தனது மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ₹179 இலிருந்து ₹199 ஆகவும், போஸ்ட்பெய்ட் திட்டத்தை ₹399 இலிருந்து ₹449 ஆகவும் உயர்த்தியது.
BSNL-க்கு கிடைத்த அற்புதம்… ஆனால்?
ஏர்டெல் மற்றும் ஜியோவின் இந்த கட்டண உயர்வுகள், பயனர்களை அரசு நிறுவனமான BSNL-ஐ நோக்கித் தள்ளின. ‘5ஜி இல்லை என்பதுதான் BSNL-ன் ஒரே குறை; அட, 5ஜி எதுக்கு நெட் வந்தா பத்தாதா?’ என சாமானிய மக்கள் 4ஜிக்கே சம்மதித்து, BSNL-ஐ நோக்கி PORT நம்பர்களுடன் நகர ஆரம்பித்தார்கள். இதனால், BSNL கணிசமான எண்ணிக்கையிலான புதிய சந்தாதாரர்களைப் பெற்றது. இது ஒரு ஜாக்பாட் போல இருந்தது.
ஆனால், இந்த நிலை நீடிக்கவில்லை. கடந்த மே மாத புள்ளிவிவரங்களின்படி, BSNL சுமார் 1.35 லட்ச சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதேசமயம், ஏர்டெல் 2.5 லட்ச சந்தாதாரர்களையும், ஜியோ 27 லட்ச சந்தாதாரர்களையும் கூடுதலாகப் பெற்றுள்ளன.
இனி என்ன ஆகும்?
தற்போது, ஏர்டெல் மற்றும் ஜியோ என இரண்டு பெரிய நிறுவனங்களே சந்தையை ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இது போட்டித்தன்மையைக் குறைத்து, விரைவில் கட்டணங்களை உயர்த்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் உருவாக்கி உள்ளது.
மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயரவிருப்பது, பொதுமக்களுக்கு பெரும் சுமையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 58 குறைப்பு Gas Cylinder Price July 1 2025