Polytechnic Special Supplementary Exams 2025
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் – சிறப்பு துணைத் தேர்வுகள்: ஏப்ரல் 2025 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு!
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நாள்: ஜூன் 06, 2025
அறிவிப்பு எண்: DOTE/829/2025-M1
அனுப்புநர்:
தேர்வு வாரியத் தலைவர்,
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்,
கிண்டி, சென்னை – 600 025
பெறுநர்:
முதல்வர்கள்,
அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் மற்றும் சுய நிதி பாலிடெக்னிக் கல்லூரிகள்.
பொருள்: ஏப்ரல் 2025 பட்டயத் தேர்வுகளில் இறுதிப் பருவம் / துணைத் தேர்வினை எழுதிய மாணாக்கர்களில் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வினை எழுத வாய்ப்பு வழங்குதல் – தொடர்பாக.
முக்கிய அறிவிப்பு:
ஏப்ரல் 2025 இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதிப் பருவம் அல்லது துணைத் தேர்வினை எழுதி, ஏதேனும் பாடங்களில் நிலுவை வைத்துள்ள மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் நலன் கருதி, ஜூன் / ஜூலை 2025 இல் சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் சுய நிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் இந்த தேர்வுகளை நடத்துவதற்கும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கான முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 18.06.2025 புதன்
விண்ணப்பிக்க கடைசி நாள் (இரவு 11.59 வரை): 23.06.2025 திங்கள்
- தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவேற்றம் செய்யப்படும் நாள்: 25.06.2025 புதன்
- கருத்தியல் தேர்வுகள் (Theory Examination) நடைபெறும் நாட்கள்: 30.06.2025 திங்கள் முதல் 16.07.2025 புதன் வரை
- செய்முறைத் தேர்வுகள் (Practical Examination) நடைபெறும் நாட்கள்: 17.07.2025 வியாழன் முதல் 25.07.2025 வெள்ளி வரை
- தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: 30.07.2025
தேர்வுக் கட்டணம்:
வ.எண். | விவரம் | கட்டணம் (ரூ.) |
1. | விண்ணப்பக் கட்டணம் | 30/- |
2. | ஒரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் | 65/- |
விண்ணப்பிக்கும் முறை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்:
- ஏப்ரல் 2025 பட்டயத் தேர்வுகளில் இறுதிப் பருவம் / துணைத் தேர்வினை எழுதி நிலுவை வைத்துள்ள மாணவர்கள் மட்டுமே இந்த சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- மாணவர்கள் https://dipexamstndte.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.
- தேர்வு நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) https://dipexamstndte.in என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு மையங்கள்:
- கருத்தியல் தேர்வுகள் (Theory Exams): தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் / புதுச்சேரி / காரைக்காலில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பிரத்யேக தேர்வு மையங்களாக குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மையத்தினை தேர்வு செய்து கருத்தியல் தேர்வுகளை எழுதலாம்.
- செய்முறைத் தேர்வுகள் (Practical Exams): மாணவர்கள் தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளிலேயே செய்முறைத் தேர்வுகளை எழுதலாம்.
தேர்வு கால அட்டவணை:
- கருத்தியல் தேர்வுகளுக்கான கால அட்டவணை: https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- செய்முறைத் தேர்வுகளுக்கான கால அட்டவணை: மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளை அணுகி அறிந்து கொள்ளலாம்.
சந்தேக நிவர்த்தி:
ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகள் தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடு ஏற்பட்டால், dipexamstndte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு உரிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Diploma Exam Revaluation 2025 Click
https://dte.tn.gov.in/april-2025-special-supplementary-examinations