தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஒரு சூப்பர் ஹேப்பி நியூஸ்! RBI கட்டுப்பாடுகளை தளர்த்தியது! RBI New Relaxation For Gold Loan 2025

தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஒரு சூப்பர் ஹேப்பி நியூஸ்! RBI கட்டுப்பாடுகளை தளர்த்தியது!

RBI New Relaxation For Gold Loan 2025

RBI New Relaxation For Gold Loan 2025: தங்க நகை கடன் விவகாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தங்க நகை கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

RBI New Relaxation For Gold Loan 2025

சமீபத்தில் தங்க நகை கடன்களுக்கு ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தற்போது முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

புதிய தளர்வுகள் என்னென்ன?

நகை கடன் வாங்குவோர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. இனி, உங்கள் நகையின் மதிப்புக்கு ஏற்ப எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்:

ரூ. 2.5 லட்சம் வரை கடன்

உங்கள் நகையின் மதிப்பு ரூ. 2.5 லட்சம் வரை இருந்தால், அதன் மதிப்பில் 85% வரை கடன் பெறலாம். உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்கு இப்போது ரூ. 85,000 வரை கடன் கிடைக்கும்.

2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன்

வரம்பிற்குள் வரும் கடன்களுக்கு, உங்கள் நகையின் மதிப்பில் 80% வரை கடன் வழங்கப்படும்.

5 லட்சத்திற்கு மேல் கடன்

5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு, நகையின் மதிப்பில் 75% வரை கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்த புதிய தளர்வுகள், கடன் வாங்குபவர்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் உதவும்.

எப்போது அமலுக்கு வரும்?

Gold Rate in Chennai Today: Gold Continues To Tumble Creating Opportunity For Buyers; Check Latest Price - Goodreturns

புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளால் தங்க நகை கடன் வழங்கல் கணிசமாக அதிகரிக்கும் என்றும், கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் மதிப்பீடு தேவைகள்:

  • credit assessment ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான நகைக் கடன்களுக்கு மட்டுமே விரிவான கடன் மதிப்பீடு (credit assessment) தேவைப்படும்.
  • வணிகம், விவசாயம் அல்லது உற்பத்தித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ரூ. 2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு இத்தகைய விரிவான ஆய்வு தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி விதித்திருந்த தங்க நகை கடன்களுக்காக பெரும்பாலான கட்டுப்பாடுகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தங்க நகை கடன் வாங்குபவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய சலுகையாகும்.

Leave a Comment