மாவட்ட சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025! Samuga Nala Aluvalaga valaivaippu 2025

 மாவட்ட சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025

Samuga Nala Aluvalaga valaivaippu 2025

Samuga Nala Aluvalaga valaivaippu 2025: தேனி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யும் முறை குறித்த விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Samuga Nala Aluvalaga valaivaippu 2025

நிறுவனம்: மாவட்ட சமூக நல அலுவலகம்

பணியின் வகை: தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள்: 02

பணியிடம்: தேனி, தமிழ்நாடு

விண்ணப்பம் ஆரம்ப தேதி: 20.06.2025

விண்ணப்பம் கடைசி தேதி: 07.07.2025

பணியிட விவரங்கள்:

1. பணியின் பெயர்: District Mission Coordinator

  • சம்பளம்: மாதம் Rs.35,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: சமூக அறிவியல், உயிரியல் அறிவியல், ஊட்டச்சத்து, மருத்துவம், சுகாதார மேலாண்மை, சமூகப் பணி அல்லது ஊரக மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: IT Assistant

  • சம்பளம்: மாதம் Rs.20,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: கணினி/தகவல் தொழில்நுட்பம் குறித்த செயல்பாட்டு அறிவு கொண்ட பட்டப்படிப்புடன், தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணமாக்கல் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடும் வடிவங்களில் (அரசு அல்லது அரசு சாரா/ஐடி அடிப்படையிலான நிறுவனங்களில்) மாநில அல்லது மாவட்ட அளவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 Samuga Nala Aluvalaga valaivaippu 2025 விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை:

 

  • விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.
  • தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய நாட்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

 

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2025

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை https://theni.nic.in/ என்ற தேனி மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, அத்துடன் அனைத்து கல்விச் சான்றுகளையும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Social Welfare Officer, District Social Welfare Office, Room No.67, Third Floor, District Collector Office Complex, Theni District.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

விரைவு இணைப்புகள்:

 

Leave a Comment