சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வேலைவாய்ப்பு 2025
Samuga Nalan Matrum Magalir Urimai Thurai Job 2025
Samuga Nalan Matrum Magalir Urimai Thurai Job 2025: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் தேர்வு முறை பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
- வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 05
- பணியிடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 20.06.2025
- விண்ணப்பம் கடைசி தேதி: 20.07.2025
பணியிட விவரங்கள்
1. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Mission Coordinator)
- சம்பளம்: ரூ. 35,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: சமூக அறிவியல், உயிரியல், ஊட்டச்சத்து, மருத்துவம், சுகாதாரம், மேலாண்மை, சமூகப் பணி, கிராமப்புற மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
2. பாலின சிறப்பு நிபுணர் (Gender Specialist)
- சம்பளம்: ரூ. 21,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: சமூகப் பணி அல்லது பிற சமூகப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
3. நிதி கல்வியறிவு வல்லுநர் (Specialist in Financial Literacy)
- சம்பளம்: ரூ. 21,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: பொருளாதாரம் அல்லது வங்கித் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
4. தகவல் தொழில்நுட்பப் பணியாளர் – மிஷன் சக்தி திட்டம் (IT Assistant for Mission Shakti)
- சம்பளம்: ரூ. 20,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: கணினி அறிவு கொண்ட பட்டப்படிப்புடன், தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணமாக்கல் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் (அரசு அல்லது அரசு சாரா அல்லது தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நிறுவனங்களில்) பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
5. பல்நோக்கு உதவியாளர் (MTS)
- சம்பளம்: ரூ. 12,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (10+2 கல்வி முறைப்படி).
- வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
- இந்த விண்ணப்பங்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2025
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தைப் பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, 20.07.2025 அன்று அல்லது அதற்கு முன் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய கட்டிடம், அறை எண்: 5, தரைதளம், மாவட்ட ஆட்சியரகம்,
கோயம்புத்தூர்.
தொலைபேசி எண்: 0422- 2305156.
- விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
- விண்ணப்பப் படிவம்: இங்கே கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்