BIG BREAKING: பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!
School Reopen Free Bus Pass Announcement 2025
School Reopen Free Bus Pass Announcement 2025: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
1/6

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
2/6

ஆனால், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகாமல், ஜூன் 2ஆம் தேதியே திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
3/6

ஆனால் இதையடுத்து, ஜூன் 9 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல் பரவியது. இந்த நிலையில், இந்தத் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
4/6

மாணவர்கள், பொருளாதாரக் காரணமாக இடைநிற்றல் இல்லாமல் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்திட தமிழ்நாடு அரசு கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை வழங்கி வருகிறது.
5/6

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை பெற முடியாது.
6/6

இந்நிலையில், மாணவர்கள் பயண அட்டை இல்லாமல், பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, அவர்கள் தங்கள் பள்ளி சீருடை, கடந்த வருடம் வழங்கிய பயண அட்டை மற்றும் பள்ளியில் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்துப் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.