மத்திய அரசு வேலைவாய்ப்பு: 14,582 காலிப்பணியிடங்கள்! SSC CGL Recruitment 2025

மத்திய அரசு வேலைவாய்ப்பு: 14,582 காலிப்பணியிடங்கள்!

SSC CGL Recruitment 2025

SSC CGL Recruitment 2025 :நீங்கள் பட்டப்படிப்பு முடித்து, மத்திய அரசுப் பணியில் சேர விரும்புகிறீர்களா? 2025 ஆம் ஆண்டு உங்கள் கனவை நனவாக்க ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது! மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வு வாரியம் (SSC), பட்டப்படிப்பு தகுதிக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலைத் தேர்வு (SSC CGL 2025) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் குரூப் சி மற்றும் பி பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
SSC CGL Recruitment 2025
SSC CGL Recruitment 2025

மத்திய அரசு வேலைவாய்ப்பு: 14,582 காலிப்பணியிடங்கள்!

SSC மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 14,582 காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஜூன் 9, 2025 அன்று தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஜூலை 4, 2025 வரை நடைபெறும்.


SSC ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலைத் தேர்வு 2025 (SSC CGL 2025)

மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வின் மூலம் நிரப்ப உள்ளது.

பதவிகள் நிரப்பப்படும் துறைகள்:

  • வெளியுறவுத் துறை
  • உளவுத் துறை
  • ரயில்வே
  • தகவல் தொழில்நுட்பத் துறை
  • வருமான வரித் துறை
  • சிபிஐ
  • தபால் துறை
  • போதைப்பொருள் தடுப்புத் துறை
  • வெளிநாட்டு வணிகத் துறை
  • என்ஐஏ
  • பாதுகாப்புத் துறை

நிரப்பப்படும் முக்கியப் பதவிகள்:

  • உதவி அதிகாரி
  • இன்ஸ்பெக்டர்
  • சப்-இன்ஸ்பெக்டர்
  • ஆராய்ச்சி உதவியாளர்
  • ஆடிட்டர்
  • கணக்காளர்
  • வரி உதவியாளர்

முக்கியத் தகவல்கள்

வயது வரம்பு:

SSC CGL 2025 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பதவிக்கு ஏற்ப 27 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

  • SC/ST பிரிவினர்: 5 வருடங்கள் தளர்வு.
  • OBC பிரிவினர்: 3 வருடங்கள் தளர்வு.
  • மாற்றுத்திறனாளிகள்: 10 முதல் 15 வருடங்கள் தளர்வு.

கல்வித் தகுதி:

01.08.2025 தேதியின்படி, இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • இளநிலை புள்ளியியல் அதிகாரி (Junior Statistical Officer) பதவிக்கு:
    • ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், 12 ஆம் வகுப்பில் கணிதப் பாடத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
    • அல்லது, புள்ளியியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டப்படிப்பில் ஒரு பாடமாக புள்ளியியலை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
  • புள்ளியியல் புலனாய்வாளர் தரம்-II (Statistical Investigator Grade-II) பதவிக்கு:
    • பட்டப்படிப்பில் புள்ளியியல் ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

CGL தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்தப் பணியிடங்களில்,

  • குறைந்தபட்சம் நிலை – 4 இன் கீழ் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம்.
  • அதிகபட்சம் நிலை 7 இன் கீழ் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

SSC CGL தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும்:

  1. Tier I தேர்வு:
    • கணினி வழித் தேர்வு.
    • பொது அறிவு, நுண்ணறிவு, ஆங்கிலம், பொது விழிப்புணர்வு ஆகிய நான்கு பிரிவுகளில் 100 கேள்விகள் கேட்கப்படும்.
    • மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
    • கொள்குறி வகையிலான இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும்.
    • ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.50 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்).
    • இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத் தேர்விற்கு தகுதி பெறுவார்கள்.
  2. Tier II தேர்வு:
    • இது இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாகும்.
    • இதில் தேர்ச்சி பெறுபவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
    • இறுதி முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த துறைகளில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளத்திலும், mySSC என்ற மொபைல் செயலியிலும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். முதலில் ஒருமுறை பதிவு செய்து, பின்னர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
  • கட்டண விலக்கு: பெண்கள், SC/ST பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அறிவிப்பை விரிவாகப் பார்க்க, SSC அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.


முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்09.06.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்04.07.2025
கட்டணம் செலுத்த கடைசி நாள்05.07.2025
விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம்09.07.2025 முதல் 11.07.2025 வரை
முதல் கட்டத் தேர்வுஆகஸ்ட் 13 முதல் 30 வரை
இரண்டாம் கட்டத் தேர்வுடிசம்பர் 2025

இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், 18003093063 என்ற எண்ணில் அழைத்துத் தீர்வு காணலாம்.

மத்திய அரசுப் பணியில் சேரும் உங்கள் கனவு நினைவாக வாழ்த்துகள்!

Leave a Comment