12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு Clerk & Data Entry Operator வேலைவாய்ப்பு!- 3131 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்! SSC CHSL Recruitment 2025 Apply Online

12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு Clerk & Data Entry Operator வேலைவாய்ப்பு!- 3131 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!

SSC CHSL Recruitment 2025 Apply Online

SSC CHSL Recruitment 2025 Apply Online: மத்திய அரசுத் துறைகளில் 3131 Lower Division Clerk (LDC) மற்றும் Data Entry Operator (DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள், மற்றும் தேர்வு முறை பற்றிய முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
SSC CHSL Recruitment 2025 Apply Online
SSC CHSL Recruitment 2025 Apply Online

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: Staff Selection Commission (SSC)
  • பணியின் வகை: மத்திய அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 3131
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 23.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2025

பணியிட விவரங்கள்

1. Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)

  • சம்பளம்: மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
  • கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Data Entry Operator (DEO)

  • சம்பளம்: மாதம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை
  • கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள்:

  • SC/ ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ ST/ PwBD/ ESM மற்றும் அனைத்துப் பெண் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது.
  • மற்றவர்கள்: ரூ. 100/-

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Tier-I (கணினி அடிப்படையிலான தேர்வு)
  2. Tier-II (கணினி அடிப்படையிலான தேர்வு)
  3. ஆவணச் சரிபார்ப்பு (Document Verification – DV)

முக்கியத் தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

முக்கிய இணைப்புகள்:

Leave a Comment