SSC JE Notification 2025
SSC Junior Engineer 2025: 1340 வேலைவாய்ப்புகள் – உடனே விண்ணப்பிக்கவும்
SSC JE Notification 2025 பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC) ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது! Junior Engineer பதவிக்கு மொத்தம் 1340 காலியிடங்கள் உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
முக்கிய விவரங்கள்:
- பதவி பெயர்: Junior Engineer
- மொத்த காலியிடங்கள்: 1340
- கடைசி தேதி: 21.07.2025
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் டிப்ளோமா (Diploma) அல்லது பொறியியல் பட்டம் (Engineering Degree) பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 அல்லது 32 எனப் பதவிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (சரியான வயது வரம்பு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்).
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Level 6 அடிப்படையில் மாதந்தோறும் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SSC-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்கவும்: 21.07.2025 தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, கடைசி தேதிக்கு முன்பாகவே விண்ணப்பித்து விடுங்கள்!
Download Notification PDF
Latest Government Jobs 2025 Click