SSC MTS Recruitment 2025 || 1075 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு- அரசுப் பணி விண்ணப்பிக்கும் முழு விபரம்

SSC MTS Recruitment 2025

1075 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு- அரசுப் பணி விண்ணப்பிக்கும் முழு விபரம்!

SSC MTS Recruitment 2025: மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC), Multi-Tasking Staff (MTS) மற்றும் Havaldar பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1075 காலியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
SSC MTS Recruitment 2025
SSC MTS Recruitment 2025

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 26.06.2025
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.07.2025

நிறுவனம்: Staff Selection Commission (SSC)

பணியிடம்: இந்தியா முழுவதும்

வேலை வகை: மத்திய அரசு வேலை

1. Multi-Tasking Staff (MTS – உதவியாளர்)

  • சம்பளம்: மாதம் ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரை
  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

2. Havaldar (உதவியாளர்)

  • சம்பளம்: மாதம் ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரை
  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

கிளார்க் வேலைவாய்ப்பு 3131 காலியிடங்கள்! மத்திய அரசு பணி-கல்வித் தகுதி: 12th விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! SSC CHSL Recruitment 2025

வயதுத் தளர்வு:

  • SC/ ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ ST/ PwBD/ ESM மற்றும் பெண்கள்: கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள்: ரூ. 100/-

தேர்வு செய்யும் முறை:

  • கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification – DV)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment