குட் நியூஸ்! ரேஷன் கடைகளில் புதிய மின்னணு தராசு திட்டம்: முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி? Tamil Nadu Ration Good News Electronic Scale Scheme

Tamil Nadu Ration Good News Electronic Scale Scheme

குட் நியூஸ்! ரேஷன் கடைகளில் புதிய மின்னணு தராசு திட்டம்: முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி?

Tamil Nadu Ration Good News Electronic Scale Scheme குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! ரேஷன் கடைகளில் நீண்டகாலமாக இருந்து வந்த எடை குறைப்பு முறைகேடுகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் மின்னணு இயந்திரத்துடன் (POS), மின் தராசு இணைக்கப்பட உள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Tamil Nadu Ration Good News Electronic Scale Scheme

புதிய திட்டத்தின் நோக்கம்

இந்த புதிய நடைமுறை, ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்யும். தற்போது சோதனை அடிப்படையில் சென்னையில் உள்ள சில கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், விரைவில் அனைத்து கடைகளிலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 20 கிலோ அரிசிக்கு 16 கிலோவும், 2 கிலோ சர்க்கரைக்கு ஒன்றரை கிலோவும் போன்ற எடை குறைப்பு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரேஷன் முறைகேடுகளும் அரசின் நடவடிக்கைகளும்

மத்திய, மாநில அரசுகள் உணவு மானியங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கி வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த ஆண்டு சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி நிதி உதவி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நலத்திட்டங்களின் முழுப் பயனும் மக்களை சென்றடையாமல் முறைகேடுகள் தடையாக இருந்தன. குறிப்பாக, ஆதார் பதிவு மூலம் இரட்டை ரேஷன் கார்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், எடை குறைப்பு புகார்கள் தொடர்ந்து வந்தன.

Ration Porul Sariyan Edai Tamilnadu Arasu Thittam

ரேஷன் பொருட்களை பாக்கெட் போட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ஜி.எஸ்.டி. பிரச்சினைகளால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின் தராசு இணைப்பு திட்டம், இதற்கு ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

எப்படி செயல்படுகிறது?

தமிழகம் முழுவதும் உள்ள 37,328 ரேஷன் கடைகளிலும் (26,618 முழுநேர கடைகள், 10,710 பகுதிநேர கடைகள்) பி.ஓ.எஸ். மின்னணு கருவி மூலம் பொருட்கள் விநியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியில், ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை வைத்தால்தான் ரசீது வரும்.இப்போது இந்த கருவியுடன் மின் தராசு இணைக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் எந்த அளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குத்தான் பில்லும் வரும். உதாரணமாக, 20 கிலோ அரிசி வைத்தால்தான் 20 கிலோ அரிசிக்கான பில் வரும். இதனால், எடை குறைவாகவோ, அதிகமாகவோ வைத்து முறைகேடு செய்ய முடியாது.

ஆதார் கார்டில் இலவச அப்டேட்

சவால்களும் எதிர்பார்ப்புகளும்

இந்த திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் சில சவால்களைக் குறிப்பிடுகின்றனர். மின் தராசில் எடை துல்லியமாக இருந்தால் மட்டுமே பி.ஓ.எஸ். கருவியில் பில் போட முடியும் என்பதால், எடையை துல்லியமாக வைக்க அதிக நேரம் ஆவதாகவும், இதனால் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், பாக்கெட்டுகள் போட்டு வழங்கினால் இந்த பிரச்சினை இருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இந்த புதிய திட்டம் ரேஷன் கடைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்து, மக்களுக்கு சரியான எடையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment