தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- ரூ.19,500 சம்பளம்
Tamil Nadu Stationary and Printing Department Recruitment 2025
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Tamil Nadu Stationary and Printing Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள Junior Binder பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
- பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
- பதவியின் பெயர்: Junior Binder
- மொத்த காலியிடங்கள்: 05
- மாத சம்பளம்: Rs. 19,500 – 71,900
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கல்வித் தகுதி
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து Binder பிரிவில் தொழில்நுட்ப வர்த்தக சான்றிதழ் (Technical Trade Certificate) பெற்றிருக்க வேண்டும் அல்லது அப்ரண்டிஸ் சட்டம், 1961-ன் கீழ் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
- அல்லது அச்சு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (Diploma in Printing Technology) பெற்றிருக்க வேண்டும்.
- பார்வையற்றவர்களுக்கு, பூந்தமல்லியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தால் (Government Industrial Training Centre for Blind) வழங்கப்பட்ட புத்தக பைண்டிங் (Book Binding) வர்த்தக சான்றிதழ் போதுமானது.
வயது வரம்பு
- 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
- தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதாரர்கள் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,
110, அண்ணா சாலை,
சென்னை – 02.
விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |