10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய மூன்று அறிவிப்புகள்!
TN 10th Pass Students Skill Training Program
TN 10th Pass Students Skill Training Program: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருந்தால் தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு கொடுக்கும் லோன் தொடர்பான விவரங்கள் மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது உள்ளிட்ட பல முக்கிய விவரங்களுடன் கூடிய வழிகாட்டல் கிடைக்கும்.
முதல் அறிவிப்பு
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் “Lead to Dea/ தொடர்பான ஒரு நாள் பயிற்சியானது 06.06.2025 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.
நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் முக்கிய அம்சங்கள். – விற்பனை செய்வது எப்படி? ஒரு சிறந்த வியாபாரியின் வெற்றிக்குறிகள் இங்கே! – உங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களிடம் செல்வதற்கான சரியான வழிமுறை தெரிய வேண்டுமா?
புதிய வியாபாரத் துறையினருக்கும், அனுபவம் உள்ள தொழில்முனைவோர்களுக்கும் ஏற்றது!
– விற்பனையின் அடிப்படை உத்திகள். – வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறும் வழிகள். சந்தையைப் புரிந்து கொண்டு, விற்பனை செய்வது. எதிர்ப்புகளை எப்படி கையாள்வது. – சிறந்த வணிக ஒப்பந்தம் கலைகள்.
விற்பனையை கலைப்படுத்தி, வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்!
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண்/திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.9543773337/ 9360221280. முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் இடம்: EDI-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை – பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி.
ஒரு மேக்அப் கலைஞரின் பயிற்சிகள்
– திருமண & வரவேற்பு மேக்க்அப் லுக். – HD, 3D, 4D மேக்க்அப் நுட்பங்கள். – ஸ்பெஷல் எஃபெக்ட் (SFX) மேக்க்அப் கலைகள். இயற்கை தோற்றம் தரும் பருத்த புரோ வலைகள். – தோல் உணர்திறன் சோதனை மற்றும் திருத்தம். – அதிக நுட்பமுள்ள கண் மேக்க்அப் மற்றும் ஹேர் ஸ்டைலிங். – சேலை அணிவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி. – தயாரிப்பாளர்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை. – முழுமையான பயிற்சி (100% ஹான்ட்ஸ்-ஆன்). – வேலைவாய்ப்பு வழிகாட்டி உதவி.
* யாருக்காக? > மேக்கப் ஆர்வலர்கள் > சலூன் தொழில்முனைவோர் > அழகு துறையில் பணியாற்ற விரும்புபவர்கள்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337/9360221280, இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600032.அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.
மூன்றாவது அறிவிப்பு
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 09.06.2025 முதல் 11.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றின் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் முதலியன, ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.
மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600032. தொலைபேசி எண் – 8668102600. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.