தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை- மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
TN 3 Days Continue Holidays 2025
TN 3 Days Continue Holidays 2025: கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற நிலையில், அடுத்த விடுமுறை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை
மத்திய அரசு, ஈகைப் பெருநாளான பக்ரீத் பண்டிகைக்காக ஜூன் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை நாட்கள் ஐந்து (5) மற்றும் ஆறு (6) நாட்கள் வேலை வாரத்தைக் கடைப்பிடிக்கும் அலுவலகங்களுக்குப் பொருந்தும் என மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை மற்றும் விடுமுறை
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் பிறை தெரிவதன் அடிப்படையில் ஜூன் 6 அல்லது 7 ஆம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனால் மற்ற மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை நாள் வேறுபடும், அதற்கேற்ப விடுமுறையும் விடப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதனால், தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகைக்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வழக்கமான வார இறுதி நாட்கள் மட்டுமே விடுமுறையாகக் கிடைக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் விடுமுறை!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.