தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையில் களப்பணியாளர் வேலை!.. நேர்காணல் மூலம் தேர்வு உடனே அப்ளை பண்ணுங்க!..
TN Climate Change Mission Recruitment 2024 Mayiladuthurai
TN Climate Change Mission Recruitment 2024 Mayiladuthurai மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வெளியாகியுள்ள தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள்( Technical Staff/ Field Staff) வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.
Technical Staff / Field Staff
காலிப்பணியிடங்கள்
Technical Staff / Field Staff பணிக்கான 01 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Technical Staff / Field Staff பணிக்கான சம்பளம் மாதம் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் MS Office பற்றிய அடிப்படை தகுதி இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற இருமொழிகளிலும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயதுவரம்பு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை
- தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Member Secretary,
District Climate Change Mission
Wildlife Division Office,
Collectorate Master complex
Nagapattinam – 611003
E- Mail Address :
wlwngp@gmail.com
Apply Last Date: 13/09/2024
Notification Pdf | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |