தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு-அமைச்சர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
TN Govt Certificate Easily Received For School Students
TN Govt Certificate Easily Received For School Students: மாணவர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் பிற தேவைகளுக்காக அத்தியாவசியமான சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை விரைவாகப் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்த இரண்டு சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இது அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்
சாதி சான்றிதழ் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்:
- தந்தை அல்லது தாயின் சாதி சான்றிதழ்
- விண்ணப்பிக்கும் மாணவரின் ஆதார் அட்டை
- தாய் மற்றும் தந்தையின் ஆதார் அட்டை
- விண்ணப்பிக்கும் மாணவரின் பிறப்பு சான்றிதழ்
- ரேஷன் அட்டை
இந்த ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் மாணவர்கள் சாதி மற்றும் வருமான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து, விரைவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த புதிய நடைமுறை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.