TN Polytechnic Result 2025
தமிழக பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2025 தேதி
தமிழகத்தில் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் 2025 எப்போது வெளியாகும்?
TN Polytechnic Result 2025: தமிழகத்தில் பாலிடெக்னிக் தேர்வுகள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் (TNDTE) மூலம் நடத்தப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை, இரண்டு பருவங்களாக நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ஏப்ரல் 2025-ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் நடைபெற்றன.
ஏப்ரல் 2025 டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெற்றன.
இந்த ஆண்டு புதிய முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. முன் எப்போதும் இல்லாத வகையில், கருத்தியல் தேர்வு (Theory Exam) மற்றும் செய்முறைத் தேர்வு (Practical Exam) இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
- கருத்தியல் தேர்வுகள் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி வரை நடைபெற்றன.
- செய்முறைத் தேர்வுகள் மே 2 ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெற்றன.
பாலிடெக்னிக் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியானது ஆன்லைன் மூலமாக (ஆன் ஸ்கிரீன்) மே 19, 2025 முதல் நடைபெறுகிறது.
மேலும், நேரடியாக மைய மதிப்பீட்டுப் பணி (விடைத்தாள் திருத்தும் பணி) மே 27 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Result April 2025 தேர்வு முடிவுகள் எப்போது? Both Theory and Practical
செய்முறைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண்கள், ஒவ்வொரு நாளும் செய்முறைத் தேர்வு நடைபெற்றவுடன், அந்த மாணவருடைய மதிப்பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே, செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்குத் தயார் நிலையில் உள்ளன.
கருத்தியல் தேர்வுக்கான மதிப்பெண்கள், விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு செய்தவுடன் மட்டுமே மாணவர்களுடைய மதிப்பெண்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
தற்போது கருத்தியல் தேர்வுக்கான மைய மதிப்பீட்டுப் பணிகளும் (விடைத்தாள் திருத்தும் பணிகள்) தொடங்கி உள்ளதால், இந்த முறை மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 2025 இல் கட்டாயம் வெளியாகும்.
தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்த வலைத்தளத்தில் (வெப்சைட்டில்) இந்த இடுகையில் (போஸ்டில்) உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். எனவே, தேர்வு முடிவு பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்ள, மாணவர்கள் இந்த லிங்கை (link) கிளிக் செய்தால், உடனடியாக தினசரி அப்டேட்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
தன்னாட்சி கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணி
தன்னாட்சி கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்தும் பணி (ஆன்லைன் டிஜிட்டல் ஸ்கிரீன் மூலம்) மே 19, 2025 அன்று முதல் தொடங்கியது.
இதில், மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்கங்கள் மூலம் அனுப்பப்படும். ஆசிரியர்கள் ஸ்கேன் செய்த விடைத்தாளை ஸ்கிரீன் மூலமாகவே படித்து, விடைத்தாள்களைத் திருத்தி, அதற்கான மதிப்பெண்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடைத்தாள் திருத்தும் பணி விவரம்
விடைத்தாள் திருத்தும் பணியானது மே 23 ஆம் தேதி தொடங்கி, துறைவாரியாக சுமார் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நடைபெற்றது.
Paper Valuation விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தவுடன், மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஆன்லைன் மூலமாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திற்குப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
மே மாத இறுதி வாரத்தில், செய்முறைத் தேர்வுக்கான அனைத்து தேர்வு தொடர்பான ஆவணங்களும் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திற்கு அந்தந்த கல்லூரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி
எனவே, தேர்வு முடிவுகள் ஜூன் 2, 2025 அன்று வெளியாகும் என ஏற்கனவே தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கமானது அறிவித்திருந்தது. அதன்படி, அன்று வெளியாக வாய்ப்புள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
TNDTE Diploma Result Released Check
TNDTE Website Direct Link
Diploma Result Live Update
04.06.2025 தேர்வு முடிவு எப்போது வேண்டுமானலும் வெளியாகலாம்.
1 thought on “தமிழக பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2025 TN Polytechnic Result 2025 – DOTE”