தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு: ரேஷன் அட்டை வகையை மாற்றிக் கொள்ளலாம்! TN Ration Card Type Change to Online

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு: ரேஷன் அட்டை வகையை மாற்றிக் கொள்ளலாம்! 

TN Ration Card Type Change to Online

TN Ration Card Type Change to Online: தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி, நீங்கள் விரும்பினால் உங்கள் ரேஷன் அட்டை வகையை ஆன்லைனிலேயே மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

TN Ration Card Type Change to Online

குறிப்பாக, நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் பெற விருப்பமில்லாத வசதியான குடும்பங்கள், தங்கள் அட்டையை ‘பொருளில்லா அட்டை’ (NPHH-NC) வகைக்கு மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளியானாலும், இது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

உங்கள் ரேஷன் அட்டை வகை என்ன?

தமிழகத்தில் மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப, உணவுப்பொருள் வழங்கல்துறை மூலம் 5 வகையான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. உங்கள் அட்டை எந்த வகையைச் சேர்ந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்:

  • அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) அட்டை: மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை மூலம் மாதம் 35 கிலோ அரிசி வரை பெறலாம். அரசு திட்டங்களில் இவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
  • முன்னுரிமை குடும்ப அட்டை (PHH): வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் இந்த அட்டையைப் பெறுவர். அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைக்கும்.
  • முன்னுரிமை இல்லாத குடும்பங்கள் (NPHH): பொருளாதாரத்தில் ஓரளவு பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டையிலும் அரிசி, கோதுமை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும். PHH அட்டையுடன் ஒப்பிடும்போது சலுகைகள் சற்று குறைவாக இருக்கும்.
  • சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S): பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் விரும்பிப் பெறும் அட்டை இது. அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் கிடைக்காது. அரசின் பிற திட்டங்களில் மானியம் பெறத் தகுதியற்றவர்கள்.
  • பொருளில்லா அட்டை (NPHH-NC): பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் பெறுவதற்கான அட்டை. இதை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். நியாயவிலைக் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்க முடியாது.

ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத வசதியான குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கும் விதமாக, www.tnpds.gov.in என்ற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து தங்கள் அட்டையைப் பொருளில்லா ரேஷன் அட்டையாக (NPHH-NC) மாற்றிக்கொள்ளலாம்.

இது ஒரு தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலானது; கட்டாயமல்ல. ஏற்கனவே கடந்த மே மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மாதம் ரூ.22,000 வரை சம்பாதிக்கலாம் தமிழக அரசின் இலவச பயிற்சி திட்டம்! Free Skill Development Scheme For Women

இந்த அறிவிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் அதே வேளையில், தேவை இல்லாதவர்கள் தாமாக முன்வந்து தங்கள் உரிமையைத் தியாகம் செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Leave a Comment