TNEA 2025 Engineering Cut Off Marks
TNEA 2025: பொறியியல் கட் ஆஃப் கணிசமான உயர்வு; யாருக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும்? நிபுணர் விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025-க்கான தரவரிசைப் பட்டியல் TNEA 2025 Engineering Cut Off Marks வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எந்தக் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
TNEA 2025 – ஒரு பார்வை
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுமார் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என அனைத்து வகையான பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்தக் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்கிறது.
Expected Engineering Cut Off TNEA 2025
பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 அன்று தொடங்கி ஜூன் 6 அன்று நிறைவடைந்தது. இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்து, இன்று (ஜூன் 27) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கட் ஆஃப் உயர்வு – நிபுணர் தினேஷ் பிரபு விளக்கம் TNEA Cut Off prediction by Dinesh Prabhu
கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் பக்கத்தில் இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் நிலவரம் குறித்து விளக்கியுள்ளார். இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் 0.5 முதல் 50 மதிப்பெண்கள் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 2.39 லட்சம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு 141 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, பல்வேறு கட் ஆஃப் பிரிவுகளில் மதிப்பெண் உயர்வு ஏற்பட்டுள்ளது. Tamil Nadu Engineering Admission
TNEA Rank List Check Now
கட் ஆஃப் மதிப்பெண் நிலவரம் (தோராயமாக)
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் உயர்வை தோராயமாகக் காட்டுகிறது: Counselling
கட் ஆஃப் வரம்பு (கடந்த ஆண்டு) | எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் உயர்வு (இந்த ஆண்டு) |
199.50 – 200 | 0.5 மதிப்பெண்கள் |
198.50 – 199 | 1 மதிப்பெண் |
197.50 – 198 | 1.5 மதிப்பெண்கள் |
196.50 – 197 | 2 மதிப்பெண்கள் |
195 – 196 | 2.5 மதிப்பெண்கள் |
192 – 194.50 | 3 மதிப்பெண்கள் |
190.50 – 191.50 | 3.5 மதிப்பெண்கள் |
188.50 – 190 | 4 மதிப்பெண்கள் |
186.50 – 188 | 4.5 மதிப்பெண்கள் |
185 – 186 | 5 மதிப்பெண்கள் |
183.50 – 184.50 | 5.5 மதிப்பெண்கள் |
181.50 – 183 | 6 மதிப்பெண்கள் |
180 – 181 | 6.5 மதிப்பெண்கள் |
175க்கு மேல் | 8 மதிப்பெண்கள் |
170க்கு மேல் | 9.5 மதிப்பெண்கள் |
165க்கு மேல் | 11 மதிப்பெண்கள் |
160க்கு மேல் | 12 மதிப்பெண்கள் |
155க்கு மேல் | 11.5 மதிப்பெண்கள் |
150க்கு மேல் | 15 மதிப்பெண்கள் |
145க்கு மேல் | 16.5 மதிப்பெண்கள் |
140க்கு மேல் | 18 மதிப்பெண்கள் |
135க்கு மேல் | 20.5 மதிப்பெண்கள் |
130க்கு மேல் | 22 மதிப்பெண்கள் |
125க்கு மேல் | 26 மதிப்பெண்கள் |
120க்கு மேல் | 37 மதிப்பெண்கள் |
115க்கு மேல் | 37.5 மதிப்பெண்கள் |
110க்கு மேல் | 40 மதிப்பெண்கள் |
105க்கு மேல் | 45 மதிப்பெண்கள் |
100க்கு மேல் | 50 மதிப்பெண்கள் |
இந்தக் கட் ஆஃப் உயர்வு, மாணவர் சேர்க்கைப் போட்டியை மேலும் கடுமையாக்கும். மாணவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு ஏற்ற சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.