Today Gold Rate Details May 28
இன்று தங்கத்தின் விலை கடும் சரிவு!- நகை கடைகளில் குவியும் மக்கள்!..
Today Gold Rate Details May 28: சென்னையில் இன்று (மே 28) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 480 குறைந்து ரூ. 71,480-க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 360 உயர்ந்த நிலையில், இன்று இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

சர்வதேச பொருளாதார சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகெங்கிலும் நடக்கும் போர்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 12 அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்தைத் தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், குறைந்தபட்சமாக ஏப்ரல் 8 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 65,800-க்கும், அதிகபட்சமாக ஏப்ரல் 22 அன்று ரூ. 74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஏப்ரல் 30 அன்று அட்சய திருதியை தினத்தன்று, ஒரு கிராம் தங்கம் ரூ. 8,980-க்கும், ஒரு சவரன் ரூ. 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மே 1 அன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,640 சரிந்து ரூ. 70,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ. 205 குறைந்து, ஒரு கிராம் ரூ. 8,775-க்கு விற்பனையானது.
மே 28-ஆம் தேதியான இன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ. 80 குறைந்து ரூ. 8,935-க்கும், ஒரு சவரன் ரூ. 71,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.