UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை: மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டம்! UPI Charges Latest News

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை: மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டம்!

UPI Charges Latest News

டெல்லி: UPI Charges Latest News: சமீபகாலமாக சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி ஊடகங்களில், யு.பி.ஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தவறான தகவல் பரவி வந்தது. குறிப்பாக, ₹2,000 அல்லது ₹3,000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என வெளியான செய்திகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

UPI Charges Latest News

இந்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய நிதி அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில், “யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படாது. அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் வணிக கணக்குகளுக்கும் பரிவர்த்தனை கட்டணம் (MDR) எதுவும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

UPI Charges

நிதி அமைச்சகம் மேலும் கூறுகையில், “யு.பி.ஐ பரிவர்த்தனை முறையில் இன்றைய நிலவரப்படி எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் தொடர்ந்து செயல்படும்” என்று உறுதிப்படுத்தியுள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, மாதத்திற்கு 100 கோடிக்கும் அதிகமான யு.பி.ஐ பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அசுர வளர்ச்சிக்கு, கட்டணமில்லா பரிவர்த்தனை முறையே முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, யு.பி.ஐ பயனாளர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தொடர்ந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தலாம்.

Leave a Comment