ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி துறையில் புதிய வேலைவாய்ப்பு- கல்வித் தகுதி:10th||சம்பளம் ரூ.56,900 GST Customs Recruitment 2025 Apply

ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி துறையில் புதிய வேலைவாய்ப்பு- கல்வித் தகுதி:10th||சம்பளம் ரூ.56,900

GST Customs Recruitment 2025 Apply Now

GST Customs Recruitment 2025 Apply: ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரித்துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் மத்திய அரசு வேலை வாய்ப்பு வகையின் கீழ் வருகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

GST Customs Recruitment 2025 Apply

நிறுவனம்: ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை

வகை: மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 14

பணியிடம்: இந்தியா

விண்ணப்பம் ஆரம்ப நாள்: 27.04.2025

விண்ணப்பம் கடைசி நாள்: 10.06.2025

1. சீமேன் (Seaman)

  • சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
  • காலியிடங்கள்: 04
  • கல்வி தகுதி:
    • 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.
    • கடலில் செல்லும் எந்திரமயமாக்கப்பட்ட கப்பலில் மூன்று வருட பணி அனுபவம், இதில் இரண்டு வருடங்கள் சுக்கான்காரர் மற்றும் மாலுமி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

2. கிரீசர் (Greaser)

  • சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
  • காலியிடங்கள்: 07
  • கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும் கடலில் செல்லும் எந்திரமயமாக்கப்பட்ட கப்பலில் பிரதான மற்றும் துணை இயந்திரங்களை பராமரித்ததில் மூன்று வருட அனுபவம்.

3. டிரேட்ஸ்மேன் (Tradesman)

  • சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
  • காலியிடங்கள்: 03
  • கல்வி தகுதி:
    • மெக்கானிக்/ டீசல்/ ஃபிட்டர்/ டர்னர்/ வெல்டர் /எலக்ட்ரீஷியன்/ இன்ஸ்ட்ரூமென்டல்/ கார்பென்ட்ரி ஆகியவற்றில் ஐ.டி.ஐ சான்றிதழ்.
    • 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.
    • இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல்/ கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் இரண்டு வருட அனுபவம்.

வயது வரம்பு:

  • 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • வயது தளர்வு: ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்:

  • கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • உடல் திறனாய்வுத் தேர்வு (நீச்சல் உட்பட – Physical Endurance Test (Swimming))
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

GST Customs Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:

GST Customs Recruitment 2025 Apply விண்ணப்பப் படிவத்தை www.cbic.gov.in, https://punecgstcus.gov.in ஆகிய இணையதளங்களில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS, OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS, 4TH FLOOR, GST BHAVAN, 41/A, SASSOON ROAD, PUNE – 411001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Latest Government Jobs- Click Here

Leave a Comment