வெறும் ரூ. 333 செலுத்தினால் போதும் 5 லட்சம் பெறலாம் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. Post Office RD Scheme In Tamil 2024

 வெறும் ரூ. 333 செலுத்தினால் போதும் 5 லட்சம் பெறலாம் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

Post Office RD Scheme In Tamil 2024

Post Office RD Scheme In Tamil 2024: மத்திய அரசாணது போஸ்ட் ஆபீஸ் திட்டம் மூலமாக மக்களுக்கு அதீத வட்டியுடன் சேவையை வழங்கி வருகிறது தற்போதைய காலகட்டத்தில் மக்களினுடைய மத்தியில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் அதிக அளவு வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இது மிகவும் பாதுகாப்பாகவும் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி சலுகைகளை வழங்கும் திட்டமாகவும் உள்ளன .அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் தொடர் வைப்பு நிதி ரெக்யூரிங் டெபாசிட் திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கணக்கு தொடங்கினால் 6.8% வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்ச முதலீடாக வெறும் 100 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

Banks may get ₹1.6 lakh cr deposits after ₹2000 note withdrawal: RBL Bank | Fortune India

இதன் முதிர்வு காலமானது ஐந்தாண்டுகள் என்றாலும் தேவைப்பட்டால் மேலும் ஐந்து ஆண்டுகள் வரை கூட நீங்கள் நீட்டித்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, இந்த திட்டத்தில் மாதாந்திர டெபாசிட்டுகளை சரியான நேரத்தில் தவறாமல் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அபராதமாக 1% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இது 4 நாட்கள் தொடர்ந்தால் கணக்கு தானாகவே மூடப்படும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் முதலீடு  செய்வதன் மூலம், ரூ. 17 லட்சத்தை நீங்கள் பெறலாம். அது எப்படி என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதாவது, நீங்கள் தினசரி ரூ.333 என்ற கணக்கில் பணத்தை சேமித்து வைக்கிறீர்கள் என்றால், அது 1 மாதத்திற்கு மொத்த தொகையாக ரூ.10,000 என்ற மதிப்பில்  உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் இந்த RD திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து உங்களுடைய மொத்த முதலீடு ரூ. 5,99,700 ஆக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த  5 ஆண்டுகளில்  உங்களுக்கு வட்டி வருமானமாக மட்டுமே ரூ.1,15,427 கிடைக்கும். மேலும், வட்டியும் முதலும்  சேர்த்து மொத்த முதிர்வு தொகையாக உங்களுக்கு ரூ.7,17,827 கிடைக்கும். இதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் பட்சத்தில், முதிர்வு தொகையாக மொத்தம் ரூ, 17,18,546 உங்களுக்கு கிடைக்கும்.

Leave a Comment