Free Aadhaar Update Last Date June 14 ஆதார் கார்டில் இலவச அப்டேட்

Free Aadhaar Update Last Date – UIDAI Free Aadhaar Update Deadline

ஆதார் கார்டில் இலவச அப்டேட்: ஜூன் 14 கடைசி நாள்!

Free Aadhaar Update Last Date June 14 : இந்தியர்களின் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு திகழ்கிறது. அரசுத் திட்டங்களைப் பெறுவது முதல் வங்கிச் சேவைகள் வரை பலவற்றிற்கும் ஆதார் அவசியம். ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Free Aadhaar Update Last Date June 14
Free Aadhaar Update Last Date June 14

Aadhaar Document Update Online Free

பொதுவாக ஆதார் அப்டேட்களுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை பலமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் ஜூன் 14, 2025 அன்றுடன் முடிவடைகிறது.

யார் அப்டேட் செய்ய வேண்டும்?

10 ஆண்டுகளுக்கும் மேலான ஆதார் கார்டை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களது விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என UIDAI அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில், அரசின் சலுகைகளைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படலாம்.

எப்படி இலவசமாக அப்டேட் செய்வது?

https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம். இதற்குத் தேவையான ஆவணங்களை இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யலாம்.

ஆன்லைனில் அப்டேட் செய்யும் முறை:

  1. https://myaadhaar.uidai.gov.in/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
  2. உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்நுழையவும்.
  3. OTP விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.
  4. உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு ‘Update Aadhaar Online’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. அடுத்ததாக ‘Proceed to Update Aadhaar’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையான தகவல்களைப் புதுப்பிக்கவும்.

முக்கிய குறிப்பு:

  • ஆன்லைனில் செய்யப்படும் அப்டேட்களுக்கு மட்டுமே கட்டணம் இல்லை. ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று அப்டேட் செய்தால் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.
  • இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

Budget Smart Phone Buy

Search Key words

  • Aadhaar Card Update Free
  • Aadhaar Update Deadline
  • UIDAI Latest News Aadhaar
  • Free Aadhar card update

Leave a Comment