தினமும் ரூ.100 செலுத்தினால் போதும் ரூ. 2 லட்சம் வரை பெறலாம் லாபம் தரும் அசத்தல் திட்டம்!.. உடனே படிச்சு பாருங்க!..
Post Office RD Scheme Details In Tamil 2024
Post Office RD Scheme Details In Tamil 2024 போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் மூலமாக நாம் பணத்தை சேமித்து அதிகப்படியான வட்டியை பெற முடியும் இதன் மூலமாக நாம் வருவாயை பெருக்க முடியும்.
குழந்தைகளுக்கு என்ற ஒரு பிரத்தியேக திட்டம் ஒன்று போஸ்ட் ஆபீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்தைப் பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
ஒவ்வொரு மாதமும் நாம் ரூபாய் 500 டெபாசிட் செய்வதன் மூலமாக வட்டி உடன் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெற போஸ்ட் ஆபீஸ் திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகள் கூட சேர்ந்து கொள்ளலாம் இதில் முதலீடு செய்வது எப்படி குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் இருந்தே சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு சேமிப்பை நம் கற்றுக் கொடுப்பதற்காக பணத்தை வீட்டில் உள்ள ஒரு உண்டியலில் போட சொல்லுவோம். உண்டியலில் சேமிப்பது என்பது கூடுதல் பலன் எதையும் தராது ஆனால் வடியையும் சேர்த்துக் கொடுக்கும் உண்டியல் ஒன்று உள்ளது.
அந்தத் திட்டம் என்னவென்றால் ரெக்கரிங் டெபாசிட் ஆர் டி எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டமானது வட்டி கொடுக்கும். உண்டியல் போல தான் செயல்படுகிறது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த திட்டத்தின் மூலம் நாம் டெபாசிட் செய்ய வேண்டும்.
முதிர்வு தொகை வட்டியுடன் சேர்ந்து கிடைக்கும் குழந்தைகளுக்கு தாங்கள் சேமிக்கும் தொகை அதிகரித்து கிடைக்கும்போது அவர்களுக்கும் மகிழ்ச்சியும் உண்டாகும். கூடவே தொடர்ந்து சேமிக்கவும் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். எனவே வெவ்வேறு காலவரமுடன் வங்கிகளிலும் ஆர்.டி வசதி உள்ளது ஆனால் போஸ்ட் ஆபீஸ் ஆர்டி 5 வருடங்கள் ஆனது இதற்கு 6.7 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது.
குழந்தைகளின் சேமிப்புக்காக போஸ்ட் ஆபீஸில் ஒரு RD கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். மாதத்திற்கு வெறும் 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம் .அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதந்தோறும் நாம் ரூபாய் 500 சேமித்து வந்தால் ஒரு வருடத்தில் 6000 ரூபாயும் 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் ரூபாயும் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு 6.7 சதவீதம் வட்டியாக 5681 ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் முதிர்வின்போது மொத்தமாக நமக்கு 35,681 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதே தொகையை ஐந்து வருடமாக உண்டியலில் போட்டுக் கொண்டு வந்தால் ரூபாய் 30,000 தான் கிடைக்கும் வட்டியின் பலன் கிடையாது.
இந்த திட்டத்தில் ஒரு மாதம் ரூபாய் பத்தாயிரம் பணம் செலுத்தி வந்தால் ஐந்து ஆண்டு நிறைவில் உங்களுக்கு ரூபாய் 7 லட்சம் வரை கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் தினமும் ரூபாய் 100 சேமிக்க நினைத்தால் மாதம் 3000 ஆக இருக்கும் இந்த பணத்தை போஸ்ட் ஆபீஸ் ஆர்டி திட்டத்தில் டெபாசிட் செய்து வந்தால் மொத்தமாக ரூபாய் 2 லட்சத்து 15 ஆயிரம் வரை நாம் வருமானம் ஈட்ட முடியும்.
இந்தத் திட்டத்தில் சேர குழந்தைகளை அழைத்துச் சென்று கணக்கு தொடங்கலாம் டெபாசிட் செய்வது எப்படி என்றும் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று புரிந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி ஐந்து வருட RD முதிர்ச்சி அடைய காத்திருக்க வேண்டும். என்பதால் குழந்தைகள் பொறுமையாக இருக்கவும் கற்றுக்கொள்வார்கள். முதிர்வு தொகை கிடைத்தவுடன் முதலீட்டுக்கு கிடைத்த வட்டியால் பணம் பெருகி இருப்பதை குழந்தைகளுக்கு விளக்கிக் கூற வேண்டும்.
அருகில் உள்ள எந்த தபால் நிலையத்திற்கும் சென்று குழந்தையின் பெயரில் கணக்கை தொடங்கலாம். குழந்தை மைனராக இருந்தால் தாய் அல்லது தந்தை பெயரில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் பெயரிலேயே கணக்கை தொடங்கலாம் கூட்டு கணக்கு வசதியும் உள்ளது இது தவிர எத்தனை RD கணக்குகளும் நாம் தொடங்கிக் கொள்ளலாம்.
இது போன்ற உதவிகரமான செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.
Whatsapp Group Link-Click Here