தமிழில் எழுத படிக்க தெரியுமா? உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க.. தமிழக அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!..
TNHRCE Recruitment 2024 Thoothukudi
TNHRCE Recruitment 2024 Thoothukudi தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களை எடுப்பதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது,
இதில் மொத்தம் ஆறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்படும் எனவும் MBBS தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் வேண்டும் .இதில் மொத்தம் இரண்டு காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் ரூபாய் 17,000 சம்பளம் வழங்கப்படும் எனவும் DGNM (Diploma in General Nursing Midwives) முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதராகவும் இருக்கின்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மொத்தம் இரண்டு பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் ரூபாய் 6000 சம்பளமும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கும் தகுதி உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக இலவசமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் 5/ 10/ 2024
Notification Pdf | Click Here |
Apply form | Click Here |
Official Website | Click Here |